என்கவுன்டர் செய்யப்பட்ட லஷ்கர் பயங்கரவாதி லத்தீஃப் பட் யார்? அதிரவைக்கும் பின்னணிவேலைகளில் மட்டுமல்ல... தேர்வுகளிலும் மூக்கை நுழைக்கும் ஏஐ! ஸ்மார்ட் கண்ணாடி மூலம் மோசடி!தமிழ்நாட்டில் நாளை கனமழை பெய்யாது! மஞ்சள் எச்சரிக்கை வாபஸ்!அரக்கோணம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட நலத் திட்டங்களைத் தொடக்கி வைத்தார் முதல்வர் விஜய்பொங்கல் ரிடர்ன்! முடிந்தது ரயில் டிக்கெட் முன்பதிவு!உலக பாரம்பரிய வாரம்: மாமல்லபுரத்தில் நாளை (நவ. 19) இலவச அனுமதி!ஜம்மு - காஷ்மீர் மசூதிக்குள் பதுங்கியிருந்த லஷ்கர்-இ-தொய்பா தளபதி என்கவுன்டர்!வ.உ.சி.யின் கொள்கைகளைப் பின்பற்றி முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்! முதல்வர் விஜய்!செம்மஞ்சேரியில் ஒலிம்பிக் சிட்டி அமைக்க டெண்டர் வெளியீடு!தீவிரப் புயலாக வலுப்பெற்றது அக்வான்!ஜம்மு-காஷ்மீரில் மோதல்! லஷ்கர்-இ-தொய்பா தளபதியை சுற்றிவளைத்த இந்திய ராணுவம்!தமிழக சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடருக்கு வாய்ப்பில்லை? ஆற்று மணல் முறைகேடு: திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்பட 27 போ் பெயா்கள் வெளியீடு எஸ்ஐஆருக்கு எதிரான வழக்குகள்: டிச. 9-இல் உச்சநீதிமன்றம் விசாரணை பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்

அன்பில் மகேஸின் நீதிமன்றக் காவல் டிச. 2 வரை நீட்டிப்பு!

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது தொடர்பாக...

Anbil Mahesh

நீதிமன்றத்தில் அன்பில் மகேஸ் ஆஜர் (கோப்புப் படம்) - DNS

Updated On :

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் நீதிமன்றக் காவல் டிசம்பர் 2-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளுக்கு பல்வேறு அங்கீகாரம், அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ. 400 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா், அமைச்சர் அன்பில் மகேஸ், தனியாா் பள்ளிகள் சங்கத் தலைவா் பி.டி. அரசகுமாா், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் முத்துகுமாா் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அன்பில் மகேஸை கடந்த அக். 26-ஆம் தேதி சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த, சென்னை ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், அன்பில் மகேஸை நவ. 6 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், அன்பில் மகேஸுக்கு விதிக்கப்பட்ட 15 நாள் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைவதையொட்டி, சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன்பாக, புழல் மத்திய சிறையிலிருந்து காணொலி வாயிலாக அன்பில் மகேஸ் இன்று (நவ. 18) ஆஜரானார்.

தொடர்ந்து அன்பில் மகேஸ் மீதான நீதிமன்றக் காவல் வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே, அன்பில் மகேஸுக்கு பிணை வழங்கக்கோரி விண்ணப்பித்த மனு மீதான விசாரணை நவ. 24-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.