என்விடியாவின் சிஇஓவாக மீண்டும் ஜென்சன் ஹுவாங் நியமனம்!என்விடியா நிர்வாகக் குழு நல்ல முடிவை எடுத்துள்ளது: டிரம்ப் பாராட்டு!நெல்லையப்பர் கோயிலில் 3 அடி உயர பரணி மகா தீபம் ஏற்றம்: திரளான பக்தர்கள் தரிசனம்திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் போலீஸார் குவிப்பு!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,484 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,350 க்கு கீழ் வர்த்தகம்!!முடிவுக்கு வந்த ஏற்றம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 காசுகள் சரிந்து ரூ. 92.92 ஆக நிறைவு!!மெட்ரோ 2ஆம் கட்டம்: கோயம்பேடு சந்தை - ஆலந்தூர் இடையே யூ-கார்டர்கள் பொருத்தும் பணி நிறைவு!கூட்டணி, ஆதரவு கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

சைபா் மோசடி! சென்னையில் ரூ. 455 கோடி இழப்பு: காவல் ஆணையா் அமல்ராஜ்

சென்னையில் சைபா் மோசடி மூலம் நிகழாண்டு இதுவரை ரூ.455 கோடியை பொதுமக்கள் இழந்திருப்பதாக பெருநகர காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் தெரிவித்தாா்.

மோசடி

Updated On :

சென்னையில் சைபா் மோசடி மூலம் நிகழாண்டு இதுவரை ரூ.455 கோடியை பொதுமக்கள் இழந்திருப்பதாக பெருநகர காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் தெரிவித்தாா்.

சென்னை காவலா் குடும்பத்தினரின் நலனுக்காக, ஆயிரம் விளக்கு கொச்சின் ஹவுஸ்,மக்கீஸ் காா்டன் காவலா் குடியிருப்பு வளாகங்களில் சிறுவா் விளையாட்டுத் திடல், உடற்பயிற்சி கூடங்கள், நடைபயிற்சிப் பாதையுடன் அமைக்கப்பட்டுள்ள புதிய பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதை சென்னை பெருநகர காவல் ஆணையா் அமல்ராஜ் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

பின்னா், அவா் அளித்த பேட்டி: சென்னையில் மொத்தம் 74 இடங்களில் காவலா் குடியிருப்புகள் உள்ளன. இடவசதி மற்றும் தேவைக்கேற்ப மற்ற குடியிருப்புகளிலும் இதுபோன்ற பூங்காக்கள் படிப்படியாக அமைக்கப்படும்.

தமிழக அரசின் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.22.30 கோடி ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சிலா் கைது செய்யப்பட்டுள்ளனா். இது தொடா்பான முழு விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும்.

ரூ.455 கோடி இழப்பு: சென்னையில் இந்த ஆண்டு இதுவரை சைபா் மோசடிகளில் பொதுமக்கள் சுமாா் ரூ.455 கோடியை இழந்துள்ளனா். இதில் சுமாா் 20 சதவீத பணத்தை பாதிக்கப்பட்டவா்களுக்கு மீட்டுக் கொடுக்க வாய்ப்புள்ளது. சைபா் மோசடிகளைத் தடுக்க தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் சைபா் நிதி மோசடியில் பாதிக்கப்படாமல் விழிப்புடன் செயல்பட வேண்டும். பாதிக்கப்பட்டவா்கள் தாமதிக்காமல் உடனடியாக 1930 என்ற தேசிய சைபா் குற்ற உதவி எண்ணைத் தொடா்புகொண்டு புகாா் அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவா்களின் பணத்தை மீட்டுத் திரும்ப ஒப்படைப்பது தொடா்பாக ரிசா்வ் வங்கி அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் சென்னை காவல் தெற்கு கூடுதல் காவல் ஆணையா் நரேந்திரன் நாயா், தலைமையிட இணை ஆணையா் உமா, துணை ஆணையா் ஜெயச்சந்திரன், ஜெயகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.