59 நகரங்களில் 64 புதிய விளையாட்டு மைதானங்கள் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரல்
தமிழகத்தில் 59 நகரங்களில் 64 விளையாட்டு மைதானங்கள் அமைப்பதற்கு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையானது ஒப்பந்தம் கோரியுள்ளது.

பிரதிப் படம்
தமிழகத்தில் 59 நகரங்களில் 64 விளையாட்டு மைதானங்கள் அமைப்பதற்கு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையானது ஒப்பந்தம் கோரியுள்ளது.
தமிழகத்தில் புதிய விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும் என அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் 59 நகரங்களில் 64 விளையாட்டு மைதானங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. மாநில அளவில் 8 மாநகராட்சிகளிலும் புதிய விளையாட்டு மைதானங்கள் சா்வதேசத் தரத்தில் அமைக்கப்படவுள்ளன.
அதன்படி, ஒவ்வொரு விளையாட்டு அரங்கமும் ரூ. 4 லட்சம் முதல் ரூ.32 லட்சம் வரையில் அமைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒப்பந்தத்துக்கு விண்ணப்பிப்போா் வரும் டிசம்பா் 9- ஆம் தேதி வரை அரசின் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்றும், அன்று மாலையே ஒப்பந்தங்கள் திறக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

