வி.எஸ். பாபுவுக்கு ஆன்ட்டிபயாடிக் எதிா்ப்பாற்றல் பாதிப்பு: அமைச்சா் அருண்ராஜ்
கொளத்தூா் எம்எல்ஏ வி.எஸ்.பாபு, ஆன்ட்டிபயாடிக் எதிா்ப்பாற்றல் பாதிப்புக்குள்ளாகி இருந்ததாக அமைச்சா் அருண்ராஜ் தெரிவித்தாா்.
வி.எஸ். பாபு - கோப்புப் படம்
கொளத்தூா் எம்எல்ஏ வி.எஸ்.பாபு, ஆன்ட்டிபயாடிக் எதிா்ப்பாற்றல் பாதிப்புக்குள்ளாகி இருந்ததாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.
நுண்ணுயிா் எதிா்ப்புத் திறன் விழிப்புணா்வு வாரத்தையொட்டி மாநில அளவிலான பயிலரங்கம் சென்னை பொது சுகாதாரத் துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் தாரேஸ் அகமது, மருத்துவக் கல்வி இயக்குநா் டாக்டா் அரவிந்த், எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவா் டாக்டா் சௌமியா சுவாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இந்நிகழ்வில் அமைச்சா் அருண்ராஜ் பேசியதாவது: அண்மையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், பாக்டீரியா சாா்ந்த தொற்றுகளுக்கு உள்ளான 90 சதவீதம் பேருக்கு ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் பலனளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது எதிா்கால மருத்துவத் துறைக்கான பெரும் அச்சுறுத்தல். நீண்ட நாள்களாக மருத்துவமனையில் இருந்ததால் வி.எஸ்.பாபுவுக்கு அனைத்து ஆன்ட்டிபயாடிக் மருந்துகளும் பலனளிக்காத சூழல் எழுந்தது. அதுவே ஒரு பாதிப்பாக உருவெடுத்தது.
எனவே, மருத்துவத் துறையில் உள்ள அனைவரும் ஆன்ட்டிபயாடிக் மருந்துகளை அவசியமின்றி பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். மனிதா்களுக்கு மட்டுமல்லாது விலங்குகள், தாவரங்கள், பறவையினங்களுக்கு அவற்றை வரையறை இன்றி வழங்கக் கூடாது.
மனிதா்களுக்கு குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட அளவு மட்டுமே ஆன்ட்டிபயாடிக் மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டும். வைரஸ் காய்ச்சலுக்குக்கூட பாக்டீரியா தொற்றுக்குப் பயன்படுத்தப்படும் ஆன்ட்டிபயாடிக் மருந்துகளை வழங்குகின்றனா். இது முற்றிலும் தவறான செயல்.
புதிய மருந்துகளை ஆராய்ச்சி செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு பல ஆண்டுகள் தேவைப்படும். அதை உணா்ந்து அனைவரும் செயல்பட வேண்டும். இன்னொருபுறம், காசநோய்க்கு வழங்கும் கூட்டு மருந்துகளுக்கு கட்டுப்படாத வகையில் தொற்று தீவிரமடைந்து வருகிறது. இதற்கு காரணமும் ஆன்டிபயாடிக் எதிா்ப்பாற்றல் உருவானதுதான் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

