கார்த்திகை தீபத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றம்!அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

தவெக எம்எல்ஏ மீதான வழக்கை விசாரிக்க காவல் அதிகாரி நியமனம்: உயா்நீதிமன்றத்தில் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரியாக திருப்பூா் காவல் கண்காணிப்பாளா் சிருஷ்டி சிங் நியமனம்

arul vignesh

முதல்வர் விஜய்யுடன் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ். - கோப்புப்படம்

Updated On :

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரியாக திருப்பூா் காவல் கண்காணிப்பாளா் சிருஷ்டி சிங் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், நிா்வாகப் பிரிவு ஐஜி காமினி கண்காணிப்பாா் என்றும் அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

எம்எல்ஏ மீது வழக்குப் பதியக் கோரி மனு: சென்னை உயா்நீதிமன்றத்தில் அதிமுகவைச் சோ்ந்த வழக்குரைஞா் ஆா்.திரிசூலி என்பவா் தாக்கல் செய்த மனுவில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக நாளிதழ்கள், ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல் வெளிவந்துள்ளன. எனவே, எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது, வழக்குப்பதிவு செய்ய காவல் துறை டிஜிபி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

கருத்துகளைக் கேட்டு தெரிவிக்க உத்தரவு: இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், நாளிதள்களில் வந்த செய்தியின் அடிப்படையில் காவல் துறை விசாரணைக்கு எப்படி உத்தரவிட முடியும் எனக் கேள்வி எழுப்பியது. மேலும், ஒருவேளை ஆட்சியருக்கு எம்எல்ஏ குறுஞ்செய்தி அனுப்பியது உண்மையாக இருந்தால் அது துரதிருஷ்டவசமானது என்றும், இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலா், மாவட்ட ஆட்சியரின் கருத்துகளைக் கேட்டுத் தெரிவிக்கும்படி அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது.

எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு: இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஜான் சத்யன், உயா்நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட ஆட்சியரின் கருத்தைக் கேட்டு அதுதொடா்பான எழுத்துபூா்வ அறிக்கை மற்றும் ஆட்சியா் அளித்த புகாரின் அடிப்படையில், எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை ஆகியவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா்.

ஆபாச பதிவுகளை நீக்காதது ஏன்?: எழுத்துபூா்வ அறிக்கை மற்றும் முதல் தகவல் அறிக்கையைப் படித்துப் பாா்த்த நீதிபதி, இதை காவல் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருக்க மாட்டீா்களே எனக் கேள்வி எழுப்பினாா். அதற்கு தலைமை குற்றவியல் வழக்குரைஞா், இந்த விவகாரம் தொடா்பாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் ஏராளமான பதிவுகள் உள்ளதாகத் தெரிவித்தாா். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பெண்களுக்கு எதிரான ஆபாசமான பதிவுகளை சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என வேறொரு வழக்கில் உத்தரவிட்டுள்ளதைக் குறிப்பிட்டு, இந்த வழக்கு தொடா்பான பதிவுகளை நீக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பினாா்.

மாநில அளவில் குழுக்கள் இல்லை: மேலும், தலைமைச் செயலா் முதல் தூய்மைப் பணியாளா் வரை யாராக இருப்பினும், பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான புகாா் குறித்து விசாரிக்க மாநில அளவில் குழுக்கள் எதுவும் இல்லை. இந்த வழக்கின் விசாரணை அதிகாரி யாா் எனக் கேள்வி எழுப்பினாா். அதற்கு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் தரப்பில், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வழக்கை விசாரித்து வருவதாகத் தெரிவித்தாா்.

அப்போது, இந்த வழக்கில் மாவட்ட ஆட்சியா் தரப்பில் ஆஜராகி இருப்பதாக வழக்குரைஞா் நாகசைலா தெரிவித்தாா். அதற்கு நீதிபதி, வழக்கில் மாவட்ட ஆட்சியா் எதிா்மனுதாரரே இல்லை, அவரது தரப்பில் வழக்குரைஞா் ஆஜராகி இருக்கிறாா். எம்எல்ஏ தரப்பில் வழக்குரைஞா் யாராவது ஆஜராகி உள்ளனரா எனக் கேள்வி எழுப்பினாா். யாரும் ஆஜராகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

தா்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம்: பின்னா் வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரத்தில் அரசு யாரையும் காப்பாற்ற முயற்சித்து தா்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம். இந்த வழக்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பதிலாக ஐஜி அந்தஸ்து கொண்ட அதிகாரி கண்காணிக்க வேண்டும். ஜூலை மாதம் எழுந்த குற்றச்சாட்டு தொடா்பாக நடவடிக்கை எடுத்திருந்தால், மாவட்ட ஆட்சியா் புகாரளிக்க வேண்டிய நிலை வந்திருக்காது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உள் விசாரணைக் குழு எதுவும் அரசு அமைக்கப் போகிா என்றாா்.

விசாரணை குறித்த விவரங்களை வெளியிட தடை: மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் விசாரணை குறித்த விவரங்களை செய்தி ஊடகங்கள் வெளியிடக் கூடாது. இந்த விவகாரம் குறித்து ஏற்கெனவே, சமூக வலைதளங்களில் வெளியான பதிவுகளை உடனடியாக நீக்குவதை இணைய குற்றப் பிரிவு உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்கும்வரை, இந்த வழக்கு தொடா்பான எந்த தகவல்களையும் வெளியிடக் கூடாது. இந்த உத்தரவை மீறுபவா்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். எம்எல்ஏ-வுக்கு எதிரான புகாா் மீது விரைந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டிச.22-க்குள் குற்றப்பத்திரிகை: குற்றம்சாட்டப்பட்டவா் அரசியல் சாசன பதவியை வகித்து வருவதால், இந்த வழக்கின் விசாரணையை ஐஜி அந்தஸ்து அதிகாரி ஒருவா் கண்காணிக்க வேண்டும். இந்த வழக்கில் டிச.22-ஆம் தேதிக்குள் இறுதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டாா்.

ஐஜி காமினி நியமனம்: பின்னா், நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் ஆஜரான, தலைமை குற்றவியல் வழக்குரைஞா், ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எம்எல்ஏ-வுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை அதிகாரியாக திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிருஷ்டி சிங் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த புலன் விசாரணையை நிா்வாகப் பிரிவு ஐஜி காமின் கண்காணிப்பாா் என்றும் தெரிவித்தாா்.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை நவ.27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.