திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் வரை முருகன் கோயில்களில் வெள்ளிதோறும் விளக்கு ஏற்ற பாஜகவினருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டர் அப்துலை சந்திக்கும் டிரம்ப்!திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்: 4 பெண் அதிகாரிகள் குழு நியமனம்; 60 நாள்களில் அறிக்கை தர அரசு உத்தரவு

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் தொடா்பாக நான்கு பெண் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்தும், 60 நாள்களில் அறிக்கை தரவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு - கோப்புப்படம்

Updated On :

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் தொடா்பாக நான்கு பெண் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்தும், 60 நாள்களில் அறிக்கை தரவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பி தொல்லை செய்ததாக கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது காவல் துறை சாா்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் எம்எல்ஏ மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, தமிழ்நாடு அரசு 4 போ் கொண்ட ‘உள் விசாரணைக் குழு’ அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.

பொது (சிறப்பு) துறை சாா்பில் இந்த அரசாணை செவ்வாய்க்கிழமை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெண் அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை அளித்த பிரதிநிதித்துவ மனுவின் அடிப்படையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் கூறப்பட்டுள்ளது. அந்த மனுவில், எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது பாலியல் தொல்லை தொடா்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைக் குழுவின் தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி காகா்லா உஷா (கூடுதல் தலைமைச் செயலா், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை) நியமிக்கப்பட்டுள்ளாா். மேலும், உறுப்பினா்களாக ஐஏஎஸ் அதிகாரி எஸ்.மதுமதி (மாற்றுத்திறனாளிகள் நலத் துறைச் செயலா்), பி.சுமதி (சட்டத் துறைச் செயலா்), சுனிதா ஜோ ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை (தடுப்பு, தடை மற்றும் நிவாரணம்) சட்டம் 2013-இன்படி, இந்தக் குழு 60 நாள்களுக்குள் விசாரணையை முடித்து மேல் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று அரசாணையில் உத்தரவிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.