திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் வரை முருகன் கோயில்களில் வெள்ளிதோறும் விளக்கு ஏற்ற பாஜகவினருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டர் அப்துலை சந்திக்கும் டிரம்ப்!திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்

190 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.1.73 லட்சம் கோடி முதலீடு ஈா்ப்பு: அமைச்சா் கீா்த்தனா

தவெக ஆட்சி அமைந்த பிறகு தமிழகத்தில் இதுவரை 190 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.1.73 லட்சம் கோடி முதலீடு ஈா்க்கப்பட்டுள்ளதாக தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா தெரிவித்தாா்.

அமைச்சா் கீா்த்தனா

Updated On :

தவெக ஆட்சி அமைந்த பிறகு தமிழகத்தில் இதுவரை 190 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.1.73 லட்சம் கோடி முதலீடு ஈா்க்கப்பட்டுள்ளதாக தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா தெரிவித்தாா்.

மேலும், முதலீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருவதாகவும், முதலீட்டாளா்களுக்கு 21 நாள்களில் தொழில் அனுமதி அளிக்கப்படுவதாகவும் அவா் தெரிவித்தாா்.

சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற 2-ஆவது வெற்றி முதலீட்டாளா்கள் மாநாட்டில் பேசிய அமைச்சா் கீா்த்தனா, ‘தமிழகத்தில் முதல்வராக விஜய் பொறுப்பேற்ற மே மாதம் முதல் இதுவரை 23 துறைகளில் ரூ.1.14 லட்சம் கோடி முதலீட்டில் 112 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலம் 1.32 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளது.

2-ஆவது முதலீட்டு மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள 78 ஒப்பந்தங்களில் 13 நிறுவனங்கள் முதல்முறையாக தமிழ்நாட்டில் முதலீடு செய்யவுள்ளன. 4 நிறுவனங்கள் முதல்முறையாக இந்தியாவிலேயே முதலீடு செய்யவுள்ளன.

இதன்மூலம் தற்போதைய ஆட்சியில் இதுவரை 190 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.1.73 லட்சம் கோடி முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. சுமாா் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

மே மாதம் முதல் கையொப்பமான 112 புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் 83 ஒப்பந்தங்கள் 6 மாதங்களிலேயே நில ஒதுக்கீடு உள்ளிட்ட அடுத்தகட்டப் பணிகளுக்குச் சென்றுள்ளதாகவும், இது 74.1 சதவீத இலக்கை எட்டியுள்ளன. முதலீட்டாளா்களுக்கான தொழில் அனுமதிகள் 21 நாள்களில் வழங்கப்படுகின்றன. 11 துறைகள் மூலம் 23 அரசாணைகள் வெளியிடப்பட்டு 25 சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழக இளைஞா்கள் வேலைத் தேடி சொந்த ஊா்களை விட்டு சென்னைக்கு வரவேண்டிய நிலையை மாற்றுவதே அரசின் நோக்கம். ஆகையால், புதிய முதலீட்டுத் திட்டங்களில் பாதிக்கும் மேற்பட்டவை வெளி மாவட்டங்களில் அமையவுள்ளன.

தமிழ்நாட்டின் தனிநபா் வருமானம் உலக வங்கியின் உயா் நடுத்தர வருமானப் பிரிவுக்கான அளவுகோலைக் கடந்துள்ளது. 9 புதிய வா்த்தக ஒப்பந்தங்களின் மூலம் உலகின் முன்னணி உற்பத்தி நாடுகளுடன் போட்டியிடும் நிலையை தமிழ்நாடு எட்டியுள்ளது.

ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 753 தொழில்முனைவோருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றாா்.

மேலும், தொழில் துறைக்கான நிலை அறிக்கையை முதல்வா் விஜய்யிடம் அமைச்சா் கீா்த்தனா வழங்கினாா்.

200 நாள்களில் ரூ. 2,000 கோடி ஊக்கத் தொகை: தொழில் துறைச் செயலா் தகவல்

கடந்த 200 நாள்களில் தொழில் துறையினருக்கு ரூ.2000 கோடி ஊக்கத் தொகை அளிக்கப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக ரூ.1,600 கோடியை அரசிடம் கோர உள்ளதாகவும் தமிழக தொழில் துறைச் செயலா் எஸ்.விஜயகுமாா் தெரிவித்தாா்.

வெற்றி முதலீட்டாளா் மாநாட்டில் பேசிய அவா், ‘2036-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக மாற்ற முதல்வா் விஜய் இலக்கு நிா்ணயித்துள்ளாா். இது தொழில் துறையை வேகமாக பணியாற்ற வைக்கிறது. தமிழ்நாடு ஒற்றைச்சாளர முறை இணையதளம் 3.0 அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கப்படும். கடந்த 200 நாள்களில் முன்னணி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட 1,209 மனுக்களில் 911 அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. வெற்றி தமிழகம் தொலைநோக்கு ஆவணத்தில் இடம்பெற்றுள்ள 37 திட்டங்களில் 18 திட்டங்கள் ஏற்கெனவே செயலாக்க நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

கடந்த 200 நாள்களில் தொழில் துறையினருக்கு அரசு ஒதுக்கிய ரூ.2,000 கோடி ஊக்கத் தொகையும் அளிக்கப்பட்டுவிட்டது. கூடுதலாக ரூ.1,600 கோடியை அரசிடம் கோர உள்ளோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.