திருப்பரங்குன்றம் தூணில் நாளை தீபம்! உத்தரவை செயல்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு!இருப்பில் உணவு, நீர், கையில் பணம்! கோவிட் காலத்தைவிட மோசமாக 2027! ஏஐ ஆராய்ச்சியாளர் எச்சரிக்கைதிருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுமதுரை ஆட்சியரின் முதற்கட்ட அறிக்கை நிராகரிப்பு: திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றம்தூணில் தீபம் ஏற்றுவது என் வேலையல்ல? மதுரை ஆட்சியர் தரப்பு வாதம்!திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை செயல்படுத்தினீர்களா? உச்ச நீதிமன்றம் கேள்விதொகுதி மறுவரையறை நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை! மு.க. ஸ்டாலின்அரசியலுக்கு வருகிறாரா? நடிகை த்ரிஷா சென்ற சிருங்கேரி சாரதா கோயிலில் என்ன விசேஷம்?121 கிலோ! திருப்பதி காணிக்கையில் வரலாறு படைத்த சென்னை தம்பதி யார்? என்னென்ன ஆபரணங்கள்? படங்கள்!அம்பாசமுத்திரம், பெருந்துறை இடைத்தேர்தலுக்கான தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!டெல்டா மாவட்டங்களில் பயிர் சாகுபடி பாதிப்பு: முதல்வர் விஜய் ஆலோசனை! ஆவடி மாநகராட்சி மக்களின் கவனத்துக்கு... புகார்கள் தெரிவிக்க மொபைல் செயலி!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (நவ. 27)பறவைகள் உயிரிழப்பு: சென்னை கிண்டி பூங்கா நவ. 30 வரை மூடல்!பெரம்பூர் தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் மனு தள்ளுபடி!

சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் வெளியான பரபரப்பு தீர்ப்பு பற்றி...

Sulur minor girl murder case: Verdict declares both arrested accused, Karthik and Mohan, guilty

கார்த்திக், மோகன்

Updated On :

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த மே மாதம் 21-ஆம் தேதி கோவை, சூலூரை அடுத்துள்ள கண்ணம்பாளையம் பகுதியில் தனது வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமி திடீரென மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்திய நிலையில், கண்ணம்பாளையம் குளம் அருகேயுள்ள தென்னந்தோப்புப் பகுதியில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.

பிரேதப் பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியானது. இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாகச் சிறுமியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி கார்த்திக் மற்றும் அவரது நண்பர் மோகன் ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்தனர்.

காவல்துறையினர் கைது செய்ய முயன்றபோது, அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து கீழே குதித்துத் தப்பிக்க முயன்ற கார்த்திக்கிற்கு வலது கை மற்றும் வலது கால் முறிந்து பலத்த காயம் ஏற்பட்டது. சிறுமிக்குக் கடையில் சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, கார்த்திக் தனது இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

அன்றைய தினம் தமிழகக் காவல்துறை டி.ஜி.பி.-யாகப் பதவி வகித்த சந்தீப் ராய் ரத்தோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு நடத்தி விசாரணையைத் துரிதப்படுத்தினார். வழக்கின் தீவிரம் கருதி காவல்துறையினர் மிக விரைவாகச் செயல்பட்டு, சம்பவம் நடந்த 21 நாட்களில் 819 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளும் முக்கிய ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கப்பட்டன.

கோவை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹரிஹரன் முன்னிலையில் கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், 68 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 221 முக்கிய ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் நவம்பர் 16ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் வழக்கின் தீர்ப்பை வரும் நவம்பர் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஹரிஹரன் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து இவ்வழக்கில் இன்று(நவ.27) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், வழக்கில் கைதான இருவரும் குற்றவாளிகள் என்று நீதிபதி அறிவித்துள்ளார். மேலும் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி தண்டனையின் முழுவிவரமும் அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

Summary

The court has delivered a sensational verdict declaring both individuals arrested in the case of the sexual assault and murder of a 10-year-old girl in Sulur guilty.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.