சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு! திருப்பரங்குன்றம் தூணில் நாளை தீபம்! உத்தரவை செயல்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு!இருப்பில் உணவு, நீர், கையில் பணம்! கோவிட் காலத்தைவிட மோசமாக 2027! ஏஐ ஆராய்ச்சியாளர் எச்சரிக்கைதிருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுமதுரை ஆட்சியரின் முதற்கட்ட அறிக்கை நிராகரிப்பு: திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றம்தூணில் தீபம் ஏற்றுவது என் வேலையல்ல? மதுரை ஆட்சியர் தரப்பு வாதம்!திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை செயல்படுத்தினீர்களா? உச்ச நீதிமன்றம் கேள்விதொகுதி மறுவரையறை நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை! மு.க. ஸ்டாலின்அரசியலுக்கு வருகிறாரா? நடிகை த்ரிஷா சென்ற சிருங்கேரி சாரதா கோயிலில் என்ன விசேஷம்?121 கிலோ! திருப்பதி காணிக்கையில் வரலாறு படைத்த சென்னை தம்பதி யார்? என்னென்ன ஆபரணங்கள்? படங்கள்!அம்பாசமுத்திரம், பெருந்துறை இடைத்தேர்தலுக்கான தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!டெல்டா மாவட்டங்களில் பயிர் சாகுபடி பாதிப்பு: முதல்வர் விஜய் ஆலோசனை! ஆவடி மாநகராட்சி மக்களின் கவனத்துக்கு... புகார்கள் தெரிவிக்க மொபைல் செயலி!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (நவ. 27)பறவைகள் உயிரிழப்பு: சென்னை கிண்டி பூங்கா நவ. 30 வரை மூடல்!பெரம்பூர் தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்றத்தில் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை குறித்து...

திருப்பரங்குன்றம் மலைமேல் தீபத்தூண் பகுதியில் தடுப்புகள் அமைத்து குவிக்கப்பட்டுள்ள போலீசார்.

Updated On :

மதுரை திருப்பரங்குன்றத்தில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் கார்த்திகை திருநாளில் தீபமேற்ற உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றவில்லை என தொடரப்பட்ட 3 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது.

தமிழக அரசு மற்றும் மனுதாரர்கள் என இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், மதியம் 2.30 மணியளவில் உத்தரவு வாசித்தது.

கார்த்திகை மாதம் முடிவடைவதற்குள் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் ஒரு முறை தீபம் ஏற்றப்பட வேண்டும் என மனுதாரர் கோரினர்.

தொடர்ந்து, மனுக்களை விசாரித்த நீதிபதிகள் அரவிந்த் அமர்வு, பஞ்சோலி தலைமையிலான அமர்வு தெரிவித்ததாவது, நீதிமன்றத்தின் உத்தரவு செயல்படுத்தப்படாமல் இருந்தது கடும் வேதனையை அளிக்கிறது.

நீதிமன்ற உத்தரவுகள் மெத்தனமாகக் கையாளப்படும்போது, அதனைப் பார்த்துக்கொண்டு நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். இத்தகைய சூழ்நிலைகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இல்லையெனில், அது அரசியலமைப்பு சார்ந்த குழப்பத்துக்கு வழிவகுக்கும். நீதிமன்றத்தின் உத்தரவு மீறப்படும்போது, எங்களால் செயலற்று அமர்ந்திருக்க முடியாது. எந்தவொரு அதிகாரத்துக்கும் உச்ச நீதிமன்றம் அடிபணியாது.

ஜனநாயக சமூகத்தில் சட்டத்தின் ஆட்சி என்ற கோட்பாடே உயர்ந்ததாகும். நீதித் துறையின் நீரோட்டத்தை மாசுபடுத்தும் எந்தவொரு முயற்சியும் சகித்துக் கொள்ளப்படாது.

இந்திய ஆட்சிப் பரப்புக்குள் உள்ள அனைத்து சிவில் மற்றும் நீதித் துறை அதிகாரிகளும் உச்ச நீதிமன்றத்துக்கு துணைநின்று செயல்பட வேண்டும். நீதித் துறைக்கு சிவில் அதிகாரிகள் துணை நிற்பதை பிரிவு 144 உறுதி செய்கிறது.

மதுரையில் நிர்வாகச் சீர்குலைவு ஏற்பட்டிருக்கிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிகாரிகளின் செயல்பாடுகள் நிர்வாகச் சீர்குலைவை வெளிப்படுத்துகிறது.

சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அதிகாரிகள் மீதான அவமதிப்பு குற்றச்சாட்டுகள் தெளிவாகின்றன என்று தெரிவித்தனர்.

மேலும், நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தாதற்கான பழியை கோயில் நிர்வாகத்தின் மீது மதுரை ஆட்சியர் சுமத்த முயற்சிப்பதாகக் கூறிய நீதிபதிகள், ஆட்சியரின் அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என மனுவை நிராகரித்தனர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக தலைமைச் செயலாளர் சாய் குமார் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. அதுமட்டுமின்றி தலைமைச் செயலாளர், டிஜிபி, அறநிலையத் துறை ஆணையர், மதுரை ஆட்சியர், மதுரை காவல் ஆணையர் ஆகியோருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

தொடர்ந்து, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் நாளை (நவ. 28) தீபமேற்றவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சிப் பிள்ளையார் கோயிலில் ஏற்றப்பட்ட தீபத்திலிருந்து தீபத்தை எடுத்துச் சென்று கல் தூணில் ஏற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழுவைக் கலைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம், மறு உத்தரவு வரும்வரையில் அறங்காவலர் குழு செயல்படக் கூடாது என்றும் தெரிவித்தது. தொடர்ந்து, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் தலைமையில் கோயிலை நிர்வகிக்க குழு அமைக்கப்பட்டது.

மேலும், மலையில் தீபமேற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, டிசம்பர் 15 ஆம் தேதிக்கு வைக்கப்பட்டது.

Summary

Supreme Court orders lighting of lamps at Madurai Tirupparankundram tomorrow

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.