கள்ளக்குறிச்சி அருகே மின் கசிவினால் 4,500 கோழிக் குஞ்சுகள் உயிரிழப்பு!
கள்ளக்குறிச்சி அருகே மின் கசிவினால் 4,500 கோழிக் குஞ்சுகள் இறந்தது பற்றி...

இறந்து கிடக்கும் கோழிக்குஞ்சுள்... - DNS
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மின் கசிவினால் கோழிப் பண்ணையில் இருந்த சுமார் 4,500 கோழிக் குஞ்சுகள் வெள்ளிக்கிழமை (நவ. 27) நள்ளிரவில் உயிரிழந்தன.
கள்ளக்குறிச்சியை அடுத்த கண்டாச்சிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ஏழுமலை (37) பட்டதாரி ஆவார். இவர் கடந்த 8 ஆண்டுகளாக நாகலூர் மின்சார வாரிய அலுவலகம் அருகில் கோழிப்பண்ணை நடத்தி வருகின்றார்.

இவர் கடந்த (25.11.26) புதன்கிழமை சின்னசேலத்தில் உள்ள கோழிப்பண்ணையில் சுமார் 4,500 கோழிக் குஞ்சுகளை வளர்ப்பதற்காக விட்டுள்ளார். வெள்ளிக்கிழமை இரவு மழை பெய்ததால் அருகில் இருந்த கடையின் கொட்டகையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.
கோழிப்பண்ணையின் உள்பக்கம் கீற்றாலும் மேல் பகுதி தகட்டிலான கொட்டகையும் அமைந்திருந்தனர். வியாழக்கிழமை இரவு நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட மின் கசிவினால் கோழிப்பண்ணை கொட்டகை தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அப்போது சாலையில் சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனத்தின் ஓட்டுநர், அதனை பார்த்து உடனே சின்னசேலத்தில் உள்ள கோழிப்பண்ணைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனே சின்னசேலம் கோழிப்பண்ணைக்காரர் ஏழுமலைக்கு அலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். உடனே அவர் எழுந்து பார்த்தபோது, கொட்டகை கொழுந்து விட்டு எரிந்ததைப் பார்த்து, பின்னர் அருகிலிருந்தவர்களுடன் சேர்ந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் பணியில் சுமார் 30 நிமிடங்களாக ஈடுபட்டார். எனினும் கோழிப்பண்ணையில் இருந்த சுமார் 4,500 கோழிக் குஞ்சுகளும் தீயில் கருகி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Chicks die due to an electrical leak near Kallakurichi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

