திருப்பரங்குன்றம் தூணில் தீபம்! வழிகாட்டுதல் குழுவில் ஆட்சியர்!திருப்பரங்குன்றத்தில் மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும்! நீதிபதிகள் அறிவிப்புதிடீரென அரோகரா என தமிழில் பதிவு! இன்று படங்களை பகிர்ந்த பிரதமர் மோடி! பின்னணி என்ன?தீபத்தூண் பகுதியில் இன்று யாருக்கும் அனுமதி இல்லை; நாளை வாருங்கள்! சிஆர்பிஎஃப் அதிகாரி வேண்டுகோள்பெரியார் அறிவுலக வழக்கு: அகல் விளக்கு உரிமையாளரை விசாரிக்க 3 நாள் போலீஸ் காவல்!தொகுதி மறுவரையறை மசோதா: கோரிக்கைகளை ஏற்றதால் திமுக ஆதரவு! மு.க. ஸ்டாலின் அறிவிப்புதிருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம்! கொப்பரை வைத்து ஏற்ற திட்டம்!அனைத்து மாநிலங்களுக்கும் 50% உயர்வு: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு!நிதியின்றி தவிக்கும் போக்குவரத்துக் கழகம்! டயர்கள் இல்லாததால் முடங்கிய பேருந்துகள்: அன்புமணி குற்றச்சாட்டுமகளிர் செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து!திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!திருப்பரங்குன்றம்: பல்வேறு பகுதிகளிலிருந்தும் முருக பக்தர்கள் வருகை!தவெக ஆட்சியில் மூலதனச் செலவினம் 11% சரிவு! தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

திருப்பரங்குன்றம்: நீதியரசர்கள் முன்னிலையில் கொண்டு செல்லப்பட்ட பூஜைப் பொருள்கள்

நீதிபதிகள் தலைமையில் மலைக்கு கொண்டு செல்லப்பட்ட மண்சட்டிகள், திரி, நெய் உள்ளிட்ட பூஜைப் பொருள்கள் குறித்து...

Task of lighting the deepam at Tirupparankundram

திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு செல்லும் பாதைக்கு உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் தீபச் சட்டியுடன் ரத வீதியில் வருகை தருகின்றனர். - DNS

Updated On :

​மதுரை: திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள 'தீபத்தூண்' கல் தூணில் தீபம் ஏற்றுவதற்காக மண்சட்டிகள், திரி, நெய் உள்ளிட்ட பூஜைப் பொருள்கள் நீதியரசர்கள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் தலைமையில் மலைக்கு கொண்டு செல்லப்பட்டன.

​உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள 'தீபத்தூண்' கல் தூணில் மகா தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தீபம் ஏற்றுவதற்குத் தேவையான தலா 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட மண்சட்டிகள், திரி மற்றும் நெய் உள்ளிட்ட பொருள்கள் சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு நீதியரசர்கள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் தலைமையில் மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

​அப்போது, அங்கிருந்த செய்தியாளர்கள், நீதியரசர் வைத்தியநாதனிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

​அதற்குப் பதிலளித்த அவர், "மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும். வேறு எந்தக் கேள்வியும் கேட்க வேண்டாம்" என்று மட்டும் தெரிவித்துவிட்டுச் சென்றார்.

மலை மேல் தீபம் ஏற்ற மேளதாளங்கள் முழங்க மேலே கொண்டு செல்லப்பட்ட மண்சட்டி, நெய், திரி  உள்ளிட்டவைகள்

மலை மேல் தீபம் ஏற்ற மேளதாளங்கள் முழங்க மேலே கொண்டு செல்லப்பட்ட மண்சட்டி, நெய், திரி உள்ளிட்டவைகள்

மேளதாளங்களுடன் மலைக்கு கொண்டு செல்லப்பட்ட மண் சட்டிகள், நெய், திரி உள்ளிட்ட பொருள்கள்

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள கல் தூணில் தீபம் ஏற்றுவதற்காக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து மண் சட்டிகள், நெய், திரி உள்ளிட்ட பொருள்கள், மேளதாளங்களுடன் மலைக்கு கொண்டு செல்லப்பட்டன.

திருப்பரங்குன்றம் மலை மேல் செல்லும் பாதைக்கு உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் தீபச் சட்டியுடன் ரத வீதியில் வருகை தந்தனர். அவர்களுக்கு திருப்பரங்குன்றம் பகுதி மக்கள் மலர் தூவி வரவேற்பு அளித்து வருகின்றனர்.

உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் இருவரும் தீபம் ஏற்றுவதற்கான உபகரணங்களை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து விட்டு, இரண்டு பேரும் தங்கும் விடுதிக்கு புறப்பட்டனர்.

யாருக்கெல்லாம் அனுமதி

முன்னதாக, மலை மேல் உள்ள கல் தூணில் தீபம் ஏற்றப்படும்போது யார் யாருக்கெல்லாம் அனுமதி என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் முடிவு எடுப்பார் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும்

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள கல் தூணில் மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும் என கோயில் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுள்ள நீதிபதிகள் அறிவித்துள்ள நிலையில், கல் தூணில் பாதுகாப்பாக தீபம் ஏற்றுவதற்கு ஏதுவாக, அங்கு சாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மேல் பச்சைக் களிமண் பூசப்பட்டு, அதன் மீது இந்த மண்சட்டிகளை நிலைநிறுத்தி, நெய் ஊற்றி மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

Task of lighting the deepam at Tirupparankundram: Ritual items transported in the presence of judges

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.