சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்! துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜகதொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!

சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்!

ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி சென்னை ரயில்வே கோட்டம் வசூலித்திருப்பது பற்றி....

Chennai Railway Division collects Rs. 46.09 crore through ticket checking in seven months!

ரயில். - கோப்புப்படம்.

Updated On :

ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி சென்னை ரயில்வே கோட்டம் வசூலித்துள்ளது.

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில், பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வோர் மற்றும் முறையற்ற பயணத்தை மேற்கொள்வோரைக் கண்டறியும் வகையில் ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, 2026–27ஆம் நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களான ஏப்ரல் முதல் அக்டோபர் 2026 வரை நடைபெற்ற பயணச்சீட்டு சோதனைகளில், மொத்தம் 6,56,661 முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இதன் மூலம் அபராதம் மற்றும் பயணக் கட்டண வித்தியாசத் தொகையாக ரூ.46.09 கோடியை சென்னை கோட்டம் வசூலித்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.36.82 கோடி வசூலிக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் ரூ.9.27 கோடி கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 25.18 சதவிகிதம் அதிகம். புறநகர் ரயில்கள், மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் உள்ளிட்ட பல்வேறு ரயில் சேவைகளில் இந்தச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பதைத் தடுப்பதுடன், முறையான பயணச்சீட்டு பெற்று பயணிக்கும் பயணிகளின் நலன்களைப் பாதுகாப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும். மேலும், பயணிகள் ரயில் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பாக ‘ரயில்ஒன்’ செயலி, ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் அல்லது பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் மூலம் உரிய பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

பயணச்சீட்டுப் பரிசோதகர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ரயில்வே பணியாளர்கள் கேட்கும்போது, பயணச்சீட்டு அல்லது உரிய பயண அனுமதியைக் காண்பிக்க வேண்டும் என்றும், பயணச்சீட்டு விதிமுறைகளைப் பின்பற்றிப் பாதுகாப்பான ரயில் பயணத்திற்குப் பயணிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சென்னை கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார்.

Summary

The Chennai Railway Division has collected Rs. 46.09 crore through ticket checking in seven months.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.