கத்திப்பாரா முதல் சென்னை விமான நிலைய நுழைவுவாயில் பகுதி வரை பசுமை வழித்தடம்!
சென்னை விமான நிலைய நுழைவுவாயில் பகுதியில் ரூ. 11.15 கோடி மதிப்பீட்டில் பசுமை வழித்தடம் அமைக்கும் திட்டம்.

ரூ. 11.15 கோடி மதிப்பீட்டில் பசுமை வழித்தடம் அமைப்பதற்கான 2 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (நவ. 18) அடிக்கல் நாட்டினார். - படம்: தமிழக அரசு
சென்னை விமான நிலைய நுழைவுவாயில் பகுதியில் ரூ. 11.15 கோடி மதிப்பீட்டில் பசுமை வழித்தடம் அமைப்பதற்கான 2 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (நவ. 18) அடிக்கல் நாட்டினார்.
முதல்வர் விஜய், தலைமைச் செயலகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 97 கோடியே 33 லட்சம் ரூபாய் செலவிலும், நகராட்சி நிருவாக இயக்குநரகத்தின் சார்பில் 73 கோடியே 64 லட்சம் ரூபாய் செலவிலும், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் அமேசான் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் 4 கோடி ரூபாய் செலவிலும் என மொத்தம்
174 கோடியே 97 லட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற 12 திட்டப் பணிகளைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
11 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னையின் நுழைவுவாயிலான சென்னை விமான நிலையப் பகுதியில் உள்ள பூங்கா மற்றும் கிண்டி, கத்திப்பாரா முதல் சென்னை விமான நிலைய நுழைவுவாயில் பகுதி வரையிலான 5.30 கி.மீ. நீளத்திற்குப் பசுமை வழித்தடம் அமைப்பதற்கான
2 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் அமேசான் (Amazon) நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ், 4 கோடி ரூபாய் செலவில் கோட்டூர்புரத்தில் நாளொன்றுக்கு 10 லட்சம் லிட்டர் (1 MLD) கழிவுநீரைச் சுத்திகரித்து, மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் வகையில் நவீன தொழில்நுட்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதல்வர் இன்று பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை வழங்கிய 6,000 சதுர அடி நிலப்பரப்பில், பக்கிங்ஹாம் கால்வாய் அடையாறு ஆற்றில் கலக்கும் முகத்துவாரப் பகுதியில் Hybrid Anaerobic Reactor, Moving Bed Bio Reactor (MBBR), Multi-grade Filter மற்றும் Ultra Filtration உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களுடன் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு சுத்திகரிக்கப்படும் நீர், நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்துவதற்கும், அருகிலுள்ள பூங்காக்கள், சாலையோரச் செடிகள் மற்றும் மரங்களின் பராமரிப்பிற்கும் பயன்படுத்தப்படும்.
அமேசான் நிறுவனம், தனது நீர்மேம்பாட்டுச் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக இத்திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்கான 100 சதவீத மூலதனச் செலவையும், அடுத்த 10 ஆண்டுகளுக்கான இத்திட்டச் செயல்பாடு மற்றும் பராமரிப்புச் செலவுகள் முழுவதையும் இந்நிறுவனமே ஏற்றுக்கொண்டுள்ளது.
அமெரிக்காவிற்கு வெளியே முதன்முறையாக, இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் இத்தகைய முன்னோடி சுத்திகரிப்பு நிலையத்தை இந்நிறுவனம் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசுக்கும், இந்நிறுவனத்திற்கும் இடையிலான ஒருங்கிணைப்பு, எதிர்காலத்தில் மேலும் பல நீர்மேம்பாட்டுத் திட்டங்களுக்கு வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Chief Minister C. Joseph Vijay laid the foundation stone today (Nov. 18) for two new projects, worth Rs. 11.15 crore, to develop a 'green corridor' at the entrance area of the Chennai Airport.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


