கோவில் நிலத்தில் அமைக்கப்பட்ட பெரியார் சிலை அகற்றம்!
கோவில் நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த பெரியார் சிலை இன்று அகற்றப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.

பெரியார் சிலை - பிரதிப் படம்
கோவில் நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த பெரியார் சிலை இன்று அகற்றப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு அருகில் பிரமசிரகண்டீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலை இன்று அகற்றப்பட்டது.
1990-ஆம் ஆண்டு முதல் இந்தச் சிலை கோவில் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு பிறப்பித்த உத்தரவின்படி அகற்றப்பட்டது.
பெரியார் ஈ.வெ. ராமசாமியின் இந்தச் சிலையை அகற்றக்கோரி ‘இந்து தமிழர் கட்சி’யைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்திலும் இவரே மனுதாரர் ஆவார்.
நீதிபதிகள் பி. வேல்முருகன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு அக்டோபர் 30 அன்று சிலையை அகற்றி வேறு இடத்தில் மாற்றியமைக்க அறிவுறுத்தியது. சிலை அரசு நிலத்தில் இல்லாமல் கோவில் நிலத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
திராவிடர் கழகத்தால் நிறுவப்பட்ட இந்தச் சிலை வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறையினர், திராவிடர் கழக உறுப்பினர்கள் முன்னிலையில் இன்று அகற்றப்பட்டது. பின்னர், அதே சாலையில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்திற்கு அந்தச் சிலை மாற்றப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மாநில அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் அது திரும்பப் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Summary
Periyar statue installed on temple land removed!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


