
போக்சோ வழக்கில் வீரமணி உள்பட மூவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை
சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் வீரமணி வழக்கில் மூவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை குறித்து...
போக்சோ வழக்கில் வீரமணி உள்ளிட்ட மூவர் மீது குண்டர் தடுப்பு நடவடிக்கை
சிறுமிகள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள வீரமணி வழக்கில் மூவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணியும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன் உள்ளிட்டோர் கடந்த ஆக. 28 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இதே குற்றச்சாட்டில் வீரமணி உதவியாளர் கணேசன் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
இந்த நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகிய மூவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கை விசாரிக்க டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவில் இருந்து விலகுவதாக துணை ஆணையர் கீதாஞ்சலி கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கீதா சேர்க்கப்பட்டுள்ளார்.
Summary
Action taken under the Goondas Act against three individuals, including GEM Veeramani, in a POCSO case
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




