வங்கிகளுக்கு சனிக்கிழமைதோறும் விடுமுறையா? மத்திய அரசு மறுப்புதென்மேற்கு பருவமழை 13% குறைவு, பருவநிலை மாற்றமே காரணம்! - இந்திய வானிலை ஆய்வு மையம்மாதத்தில் முதல் நாள்... பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்!ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!இடைத்தேர்தலில் ஓட்டுக்கு அதிக பணம் கொடுப்பது தவெகதான்! பெ. சண்முகம்சிவாஜி கணேசன் நூற்றாண்டு பிறந்தநாள் விழா! அரசு மீது நம்பிக்கை - பிரபுதங்கம், வெள்ளி விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 1)சென்னையில் டெங்கு பாதிப்பு 2 மடங்கு அதிகரிப்பு!சிவாஜி கணேசன் பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை!

மதுராந்தகத்தில் விஜய்... 5 மணி நேரம் சாலைவலம், மேல்மருவத்தூர் கோயிலில் வழிபாடு?

மதுராந்தகத்தில் முதல்வர் விஜய்யின் சாலைவலம் குறித்து...

CM Vijay

முதல்வர் விஜய் சாலைவலம் - கோப்புப் படம்

Published On :

மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் விஜய் நாளை 5 மணிநேரம் சாலை வலம் செல்லவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தலில் தவெக, அதிமுக, திமுக, நாதக, இடதுசாரிகள் என ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. இதனையொட்டி, இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமாரவேலை ஆதரித்து முதல்வரும் தவெக தலைவருமான விஜய் நாளை (அக். 2) சாலைவலம் செல்லவிருக்கிறார்.

மாமண்டூர், படாளம், கருங்குழி அய்யனார்கோயில், பெரும்பாக்கம், மேல்மருவத்தூர் வழியாக அச்சரப்பாக்கம் செல்கிறார். மாலை 4 மணி தொடங்கி இரவு 9 மணிவரையில் கிட்டத்தட்ட 40 கி.மீ. தொலைவுக்கு முதல்வர் சாலைவலம் மேற்கொள்கிறார். இதற்கிடையே, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் முதல்வர் விஜய் வழிபாடும் நடத்தவுள்ளார்.

முதல்வர் வருகையையொட்டி, சாலைவலம் மேற்கொள்ளும் இடத்தில் சுமார் 1,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், சாலைகளின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கும் பணிகளும், சுத்தம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Summary

CM Vijay to hold a five-hour roadshow in the Maduranthakam constituency tomorrow: Reports

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.