வங்கிகளுக்கு சனிக்கிழமைதோறும் விடுமுறையா? மத்திய அரசு மறுப்புதென்மேற்கு பருவமழை 13% குறைவு, பருவநிலை மாற்றமே காரணம்! - இந்திய வானிலை ஆய்வு மையம்மாதத்தில் முதல் நாள்... பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்!ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!இடைத்தேர்தலில் ஓட்டுக்கு அதிக பணம் கொடுப்பது தவெகதான்! பெ. சண்முகம்சிவாஜி கணேசன் நூற்றாண்டு பிறந்தநாள் விழா! அரசு மீது நம்பிக்கை - பிரபுதங்கம், வெள்ளி விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 1)சென்னையில் டெங்கு பாதிப்பு 2 மடங்கு அதிகரிப்பு!சிவாஜி கணேசன் பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை!

தமிழக வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா, ஷமீனாவுக்கு தலா ரூ. 30 லட்சம்..! முதல்வர் விஜய் அறிவிப்பு!

ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற ஸ்குவாஷ் வீராங்கனைகளுக்கு தமிழக அரசு ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...

Tamil Nadu squash players Joshna Chinappa and Shameena Riaz.

தமிழக ஸ்குவாஷ் வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா, ஷமீனா ரியாஸ் - படங்கள்: எக்ஸ் / சிஎம்ஓஆஃப் தமிழ்நாடு

Published On :

ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற தமிழக ஸ்குவாஷ் வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா, ஷமீனா ரியாஸ் ஆகியோருக்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படுமென முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் ஸ்குவாஷ் அணி வெண்கலம் வென்று அசத்தியுள்ளது. இந்தப் போட்டியில் தன்வி கன்னா 3-1 என வெல்ல, அனாஹத் சிங், ஷமீனா ரியாஸ் தலா 2-3 என்ற கேம்களிலும் ஜோஷ்னா சின்னப்பா 0-3 எனவும் சீன வீராங்கனைகளிடம் தோல்வியுற்றார்கள்.

இந்தியாவுக்கு 61ஆவது பதக்கத்தை வென்று கொடுத்த இந்த வீராங்கனைகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா, ஷமீனா ரியாஸ் இருந்தார்கள். இதனைப் பாராட்டி தமிழக முதல்வர் அறிவித்த ஊக்கத்தொகை குறித்து எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜப்பானில் நடைபெற்றுவரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஸ்குவாஷ் பெண்கள் குழுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்குவாஷ் வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் ஷமீனா ரியாஸ் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்களது இந்த சாதனையை பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். அவர்களது திறமை, தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவற்றால் பெற்றுள்ள இவ்வெற்றி, தமிழ்நாட்டின் விளையாட்டுத் திறனுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது.

அவர்களது வெற்றி சாதிக்கத்துடிக்கும் இளைஞர்கள் மற்றும் மகளிருக்குச் சிறந்த உத்வேகத்தை அளிக்கும். எதிர்காலத்திலும் அவர்கள் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் மேலும் உயர்த்திட எனது வாழ்த்துகள்! எனக் கூறியுள்ளார்.

Summary

Chief Minister Vijay has announced an incentive of ₹30 lakh each for Tamil Nadu sportswomen Joshna Chinappa and Shameena!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.