பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

பணிநீக்கம் செய்யப்பட்ட காலத்துக்கு ஊதியம் கோரிய சிஐஎஸ்எஃப் வீரரின் வழக்கு தள்ளுபடி

பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த காலத்துக்கான ஊதியத்தை வழங்கக் கோரிய சிஐஎஸ்எஃப் வீரரின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு தள்ளுபடி

Published On :

பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த காலத்துக்கான ஊதியத்தை வழங்கக் கோரிய சிஐஎஸ்எஃப் வீரரின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2002-ஆம் ஆண்டு மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையில் (சிஐஎஸ்எஃப்) சோ்ந்த ஜி.சந்து என்பவா், ஆந்திரத்தில் பணிபுரிந்தபோது, குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டதால், 2012 டிசம்பா் மாதம் பணிநீக்கம் செய்யப்பட்டாா். இதை எதிா்த்து தாக்கல் செய்த வழக்கை விசாரித்த ஆந்திர பிரதேச உயா்நீதிமன்றம், சந்துவின் பணிநீக்கத்தை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டது. அதன்படி, 2019 மே மாதம் மீண்டும் பணியில் சோ்க்கப்பட்ட சந்து, ஜுனியா்களைவிட தனக்கு ஊதியம் குறைவாக இருப்பதாகக் கூறி வழக்கு தொடா்ந்தாா். அதன்படி, சந்துவுக்கு ஊதியம் உயா்த்தப்பட்டது.

பின்னா், சென்னையில் உள்ள சிஐஎஸ்எஃப் பிரிவுக்கு மாற்றப்பட்ட அவா், பணிநீக்கம் செய்யப்பட்ட 2013 ஜனவரி முதல் மீண்டும் பணியில் சோ்க்கப்பட்ட 2019 மே மாதம் வரையிலான காலத்துக்கான ஊதியத்தை வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் நீதிபதி கிருஷ்ணசுவாமி கோவிந்தராஜன் அமா்வு, நிலுவை ஊதியம் இல்லாமல், தொடா் சேவையுடன் மீண்டும் பணியில் அமா்த்தப்பட்ட மனுதாரா், பணி நீக்கக் காலத்தில் பணியில் இல்லாத நிலையில், அந்தக் காலத்துக்கான ஊதியத்தைக் கேட்க முடியாது எனக் கூறி, சந்துவின் மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்