
பேரறிவாளன் பாஸ்போர்ட் கோரிய மனுவை பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாஸ்போர்ட் கோரிய பேரறிவாளன் மனுவை பரிசீலிக்கும்படி, அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பற்றி...

பேரறிவாளன் - எக்ஸ்
பாஸ்போர்ட் கோரிய விண்ணப்பத்தின் மீது விரைந்து முடிவெடுக்கக் கோரி ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆயுள் தண்டனை கைதி பேரறிவாளன் அளித்த மனுவை பரிசீலிக்கும்படி, பாஸ்போர்ட் அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் இருந்து உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ஆயுள் தண்டனை கைதியான பேரறிவாளன், விடுதலைக்குப் பின் சட்டப்படிப்பை முடித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், பாஸ்போர்ட் கோரி அவர், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத்தின் மீது எந்த முடிவும் எடுக்கப்படாததால், தனது பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் மீது விரைந்து முடிவெடுக்கக் கோரி, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கும், தாம்பரத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரத்துக்கும் மனு அனுப்பியிருந்தார்.
இந்த மனு பரிசீலிக்கப்படாததால், அதனை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் மீது விரைந்து முடிவெடுக்கக் கோரி பேரறிவாளன் அளித்த மனுவை பரிசீலிக்கும்படி, பாஸ்போர்ட் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Summary
Madras High Court orders consideration of Perarivalan passport application
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





