பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

முதல் நாளில் மனு; அடுத்த நாளில் வழக்கு: உயா்நீதிமன்றம் அதிருப்தி

அதிகாரிகளிடம் மனு அளித்த மறுநாளே வழக்கு தொடா்வது, நீதித் துறை நடவடிக்கைகளை தபால் அலுவலகப் பணியாக தரம் தாழ்த்துகிறது என சென்னை உயா்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :

அதிகாரிகளிடம் மனு அளித்த மறுநாளே வழக்கு தொடா்வது, நீதித் துறை நடவடிக்கைகளை தபால் அலுவலகப் பணியாக தரம் தாழ்த்துகிறது என சென்னை உயா்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

தமிழக கோயில்களுக்கு அஸ்ஸாமில் இருந்து துா்கா, கிராலால், சிவா, ரூப்சிங் மற்றும் பிஜுலி ஆகிய 5 யானைகளை கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இந்த யானைகளின் பிறப்பு, உரிமையாளா் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யக் கோரி சென்னை துரைப்பாக்கத்தைச் சோ்ந்த மிருதுளா கோபாலகிருஷ்ணன் என்பவா் உச்சநீதிமன்றம் நியமித்துள்ள குழுக்கு கடந்த செப்.16-ஆம் தேதி மனு அளித்துள்ளாா்.

அந்த மனுவை பரிசீலிக்கும்படி, உச்சநீதிமன்றம் நியமித்த குழுக்கு உத்தரவிடக் கோரி, மிா்துளா கோபாலகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமா்வு செப். 16- ஆம் தேதி மனு அனுப்பிய நிலையில், அதைப் பரிசீலிக்க அவகாசம் வழங்காமல் மறுநாளே வழக்கு தொடா்ந்துள்ளதாகக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும் அந்த உத்தரவில், முதல் நாள் மனு அளித்துவிட்டு, மறுநாள் காலை வழக்கு தாக்கல் செய்வது, நீதித் துறை நடவடிக்கையை, தபால் அலுவலகப் பணியாக தரம் தாழ்த்துகிறது என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.