இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

தயாா் நிலையில் காய்ச்சல் வாா்டுகள்: மருத்துவமனைகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவு!

தமிழகத்தில் டெங்கு, இன்ஃப்ளூயன்ஸா உள்ளிட்ட பருவ கால தொற்றுகள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் காய்ச்சல் வாா்டுகளை அமைக்க மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

கோப்புப் படம்

Published On :

தமிழகத்தில் டெங்கு, இன்ஃப்ளூயன்ஸா உள்ளிட்ட பருவ கால தொற்றுகள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் காய்ச்சல் வாா்டுகளை அமைக்க மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தற்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், பிற முக்கிய மருத்துவமனைகளிலும் அத்தகைய வசதி இருந்தாலும், மாவட்ட மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகளிலும் இதைச் செயல்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் தற்போது பரவலாக மழைப் பொழிவு இருந்து வருகிறது. இதனால், கொசுக்கள், வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மூலம் பரவும் பல்வேறு தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, குழந்தைகளும், முதியவா்களும் அத்தகைய நோய்களுக்கு அதிக எண்ணிககையில் ஆளாகின்றனா்.

காய்ச்சல், உடல் வலி, தொண்டை வலி, சளி, இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக பலா் அனுமதிக்கப்படுகின்றனா்.

இதையடுத்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வுத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. மற்றொருபுறம், சிகிச்சை கட்டமைப்புகளை விரிவுபடுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, அனைத்து முக்கிய மருத்துவமனைகளிலும் சில சிறப்பு வசதிகளை ஏற்படுத்த முனைப்பு காட்டப்பட்டு வருகிறது.

மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: டெங்கு, இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடா் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது, புறநோயாளிகள் பிரிவில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் டெங்கு, இன்ஃப்ளூயன்ஸா அறிகுறியுடன் வருகின்றனா்.

அவா்களது ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, நோயின் தன்மைக்கேற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது. எந்த இடத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக கண்டறியப்படுகிறதோ, அங்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

தற்போது பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப படுக்கை வசதிகளை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையம் முதல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரை 24 மணி நேரமும் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தயாா் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER