மைசூரு தசராவுக்கு விருந்தினராக முதல்வர் விஜய்யை அழைத்த கர்நாடக அரசு!
மைசூரு தசராவில் பங்கேற்க முதல்வர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது பற்றி...
தமிழக முதல்வர் விஜய்யுடன் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் - TN DIPR
மைசூரு தசரா திருவிழாவுக்கு தமிழ்நாடு முதல்வர் ச. ஜோசப் விஜய்யை சிறப்பு விருந்தினராக கர்நாடக அரசு அழைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழா வருகின்ற அக்டோபர் 11 தொடங்கி 21 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த திருவிழாவுக்கான ஏற்பாடுகளை அம்மாநில அரசு தீவிரமாக செய்து வருகின்றது.
இந்த நிலையில், தசரா திருவிழாவின் தொடக்க நிகழ்வு மற்றும் இறுதிநாள் நிகழ்வுக்கு விருந்தினர்களாக முதல்வர் விஜய் உள்பட தென்மாநில முதல்வர்களுக்கு அம்மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், தசரா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வான் சாசக நிகழ்ச்சி நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முதல்வர் டி.கே. சிவகுமார் அதிகாரிகளுடன் விவாதித்துள்ளார். இது தொடர்பான முன்மொழிவை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கலந்தாலோசிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேக்கேதாட்டு அணை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழ்நாடு முதல்வர் விஜய், கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி பெங்களூரு செல்ல திட்டமிட்டிருந்தார்.
ஆனால், மேக்கேதாட்டு விவகாரத்தில் கர்நாடகத்தில் போராட்டம் வலுத்த காரணத்தால் முதல்வர் விஜய் வர வேண்டாம் என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்தது சர்ச்சையானது.
அதன்பின்னர், உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற தென்மாநில முதல்வர்களின் மாநாட்டில் டி.கே. சிவகுமார் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
Summary
Karnataka government invites Chief Minister Vijay as a guest for Mysuru Dasara!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






