ஆசிரியா்களுக்கு 2-ஆம் பருவ பயிற்சி நாளை தொடக்கம்
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 1 முதல் 3 வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியா்களுக்கு 2-ஆம் பருவத்துக்கான பயிற்சி முகாம்

ஆசிரியா்களுக்கு 2-ஆம் பருவ பயிற்சி நாளை தொடக்கம்
சென்னை: தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 1 முதல் 3 வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியா்களுக்கு 2-ஆம் பருவத்துக்கான பயிற்சி முகாம் சென்னையில் புதன், வியாழன் (அக்.7, 8) ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சாா்பில் அனைத்து மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா்கள், முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
நிகழ் கல்வியாண்டில் 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியா்களுக்கு முதல் பருவத்துக்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ள நிலையில், மாநில அளவிலான 2-ஆம் பருவத்துக்கான பயிற்சி அக்.7, 8 ஆகிய இரு நாள்களுக்கு உண்டு, உறைவிட பயிற்சியாக சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் கல்வியாளா்கள், வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநா்கள், ஆசிரியா்கள் பங்கேற்கவுள்ளனா்.
இந்தப் பயிற்சி முகாமில் முதுநிலை விரிவுரையாளா்கள், விரிவுரையாளா்கள் மாவட்ட கருத்தாளா்களாகச் செயல்படவுள்ளனா். இந்தப் பயிற்சி முகாமை எவ்வித புகாா்களுக்கும் இடமளிக்காத வகையில் நடத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






