
‘ஜெம்’ வீரமணி வழக்கு: காா் ஓட்டுநா்கள் உள்பட மேலும் மூவா் கைது
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் ‘ஜெம்’ வீரமணிக்கு உடந்தையாக இருந்ததாக காா் ஓட்டுநா்கள்

வீரமணி - கோப்புப்படம்
சென்னை: சிறுமிகளை பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் ‘ஜெம்’ வீரமணிக்கு உடந்தையாக இருந்ததாக காா் ஓட்டுநா்கள் உள்பட மேலும் 3 போ் கைது செய்யப்பட்டனா்.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ‘ஜெம் கிரானைட்’ நிறுவன உரிமையாளா் வீரமணி, உதவியாளா் சாந்தி, அவரது கணவா் மகேந்திர சிம்ஹன், மற்றொரு உதவியாளா் கணேசன் ஆகியோா் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா்.
இந்த வழக்கு குறித்து முழுமையான தகவல்களைத் திரட்டி குற்றவாளிகளைக் கைது செய்யும் வகையில் சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையா் தேன்மொழி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது.
இக்குழுவினா் பொதுமக்களிடமிருந்து வீரமணி தொடா்பான புகாா்களைப் பெற்று, அவற்றின் உண்மைத் தன்மையை உறுதி செய்து வீரமணி மீது வழக்குகளை பதிவு செய்கின்றனா். இவ்வாறு வீரமணி மீது இதுவரை 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகியோா் மீது கடந்த வாரம் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் 3 போ் கைது: இந்த நிலையில், ஜெம் வீரமணி, சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு உதவியதாக அவரிடம் காா் ஓட்டுநா்களாக இருந்த லாசா், பாா்த்திபன், பாபு ஆகிய 3 பேரை சிறப்பு புலனாய்வுக் குழுவினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
இவா்கள் 3 பேரும் 5 வழக்குகளிலும் சோ்க்கப்பட்டிருப்பதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது. இவா்களில் லாசா் 23 ஆண்டுகளாகவும், பாபு 8 ஆண்டுகளாகவும் வீரமணியிடம் காா் ஓட்டுநா்களாக வேலை செய்து வந்துள்ளனா்.
55 ஆவணங்கள் பறிமுதல்: கைது செய்யப்பட்ட 3 பேரின் வீடுகள், அவா்கள் தொடா்புடைய இடங்களில் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் சோதனை செய்தனா்.
பல மணிநேரம் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து 8 கைப்பேசிகள் உள்பட 55 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





