மாதவரம் ஆவின் பால் பண்ணை ஆய்வகக் கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!ராகுல், பிரியங்கா மீது தில்லி காவல்துறை வழக்குப்பதிவு!ரெப்போ வட்டி விகிதம் 5.50% ஆக உயர்வு! வீட்டு, வாகன கடன் வட்டி அதிகரிக்க வாய்ப்பு!‘தவெக ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அரிவாள் வெட்டு’ - மு.க. ஸ்டாலின் கண்டனம்பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

காக்களூர் சிப்காட் ரப்பர் தொழிற்சாலையில் மின்கசிவால் தீ விபத்து!

திருவள்ளூர் அருகே காக்களூர் சிப்காட் ரப்பர் தொழிற்சாலையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது பற்றி....

Fire accident caused by an electrical short circuit at the Kakkalur SIPCOT rubber factory

காக்களூர் சிப்காட் ரப்பர் தொழிற்சாலையில் தீ விபத்து... - DIN

Published On :

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே காக்களூர் சிப்காட்டில் உள்ள ரப்பர் தொழிற்சாலையில் மின்கசிவால் ரப்பர் கழிவுகளில் தீ பற்றி மளமளவென பரவியதைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து 3 மணி நேரம் போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

காக்களூர் ரப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்கும் பணியில்ஈடுபட்டுள்ள தீயணைப்பு துறையினர்.

காக்களூர் ரப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்கும் பணியில்ஈடுபட்டுள்ள தீயணைப்பு துறையினர். - DIN

திருவள்ளூர் அருகே காக்களூர் சிப்காட்டில் 100-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ரப்பர் அறுக்கும் பொருள்களைத் தாயார் செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை வளாகத்தில் புதன்கிழமை (அக். 7) காலை அந்த தொழிற்சாலையில் உள்ள வீணாகும் ரப்பர் கிடங்கில் மின்கசிவு ஏற்பட்டு ரப்பர் கழிவுகளில் தீப்பற்றியது.

காக்களூர் ரப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்கும் பணியில்ஈடுபட்டுள்ள தீயணைப்பு துறையினர்.

காக்களூர் ரப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்கும் பணியில்ஈடுபட்டுள்ள தீயணைப்பு துறையினர். - DIN

இந்த தீ சிறிது நேரத்தில் கட்டுக்கு அடங்காமல் மளமளவென பரவியதால் கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதுகுறித்து திருவள்ளூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

அதைத் தொடர்ந்து தகவல் அறிந்த திருவள்ளூர் சிறப்பு நிலைய தீயணைப்பு அலுவலர் தனசேகரன் தலைமையில் தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்து குறித்து திருவள்ளூர் கிராமிய காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Summary

Fire accident caused by an electrical short circuit at the Kakkalur SIPCOT rubber factory

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER