
கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு! சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை!
கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது பற்றி ...

கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு - DIN
கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வெளியிடும் வரை பொதுமக்கள் இங்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் இருட்டு பள்ளம் அருகே, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி. சாடிவயல் சோதனைச் சாவடி பகுதியில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வனப்பகுதி உள்ளே சென்று, பின்னர் இந்த நீர்வீழ்ச்சியை அடையலாம்.
கோவையின் சுற்றுலாத் தளங்களில் ஒன்றாகத் திகழும் இந்த நீர்வீழ்ச்சியில் குளிக்கவும், அதன் அழகைக் கண்டு ரசிக்கவும், தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவதுண்டு.
விடுமுறை நாள்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் தங்கள் குடும்ப சகிதமாக வந்து செல்வதுண்டு, இதற்காக வனத்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ள வாகனங்களில் சாடிவயல் பகுதியில் இருந்து நீர்வீழ்ச்சி வரை அழைத்து சென்று, மீண்டும் சாடிவயல் பகுதியில் இறக்கி விடுவது வழக்கம்.

DIN
தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக, கோவை குற்றாலம் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம், சூழல் சுற்றுலா இன்று (அக். 7) முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது.
மறு அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், என யாரும் இங்கு வர வேண்டாம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Summary
Flash floods at coimbatore Kutralam Falls: Tourists barred from visiting
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






