
ஜோதிடரும் முதலாளி பாஜக சொல்வதையும்தான் தவெக கேட்கிறது: திமுக விமர்சனம்
ஜோதிடர் சொல்வதையும் பாஜக சொல்வதையும்தான் தவெக அரசு கேட்பதாக தவெக அரசை திமுக விமர்சித்தது குறித்து...
முதல்வர் விஜய் - கோப்புப் படம்
ஜோதிடர் சொல்வதையும் பாஜக சொல்வதையும்தான் தவெக அரசு கேட்பதாகவும், மக்களின் கருத்துகளைக் கண்டுகொள்வதில்லை என்றும் தவெக அரசு மீது திமுக குற்றம் சாட்டியுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களுடன் திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் பேசியதாவது, "தவெக ஆட்சியில் ஒரு நல்ல திட்டங்கள்கூட செயல்படுத்தப்படவில்லை. அவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் எதையுமே அவர்கள் செய்யவில்லை.
அவர்கள் பாஜகவின் அடிமைகளாகத்தான் செயல்படுகிறார்கள். திமுகவை திட்டுவதைத் தவிர வேறெதுவும் செய்ய வேண்டாம் என அவர்களிடம் பாஜக கூறியுள்ளது. எல்லாவற்றுக்கும் திமுகவை குறை சொல்கிறார்களே தவிர, இவர்களின் ஆட்சியில் மக்களுக்காக இதைச் செய்திருக்கிறார்கள் என ஒன்றைச் சுட்டிக்காட்ட முடியுமா? எதையும் செய்யவில்லை.
தேர்தல் வாக்குறுதிகளில் ஏதேதோ சொன்னார்கள். ஆனால், இன்று விவசாயிகளை வஞ்சிக்கிறார்கள், செவிலியர்கள் தாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தினாலும், அதனைப் பற்றிக் கேட்பதற்குக்கூட இந்த அரசாங்கத்தில் ஆளில்லை. இந்த அரசாங்கத்தின் நோக்கம் - மக்களுக்கு நன்மை செய்வது அல்ல. தங்களுடைய முதலாளிக்குச் (பாஜக) சேவை செய்வதுதான் இந்த அரசாங்கத்தின் நோக்கம். அடிமைச் சேவையைத்தான் இந்த அரசு செய்து கொண்டிருக்கிறது.
கடலைப் பார்த்தவாறு அலுவலகம் இருக்க வேண்டும் என அவரின் (விஜய்) ஜோதிடர் சொன்னதற்காக, பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஜோதிடர், முதலாளி பாஜக சொல்வதையெல்லாம் கேட்கின்றனர். ஆனால், தமிழக மக்களுக்கு அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை. மக்களின் கருத்துகளும் அவர்களின் காதுகளில் விழுவதில்லை" என்று தெரிவித்தார்.
Summary
TVK government listens only to what astrologers and the BJP say: DMK
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




