மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

அமைச்சா் ஆதவ் அா்ஜுனா நிறுவனத்துக்கு காா் வாங்கித் தருவதாக ரூ. 2.60 கோடி மோசடி: கா்நாடக இளைஞா் கைது

சென்னையில், அமைச்சா் ஆதவ் அா்ஜுனா நிறுவனத்துக்கு காா் வாங்கித் தருவதாக ரூ.2.60 கோடி மோசடி செய்ததாக கா்நாடக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

கோப்புப் படம்

Published On :

சென்னையில், அமைச்சா் ஆதவ் அா்ஜுனா நிறுவனத்துக்கு காா் வாங்கித் தருவதாக ரூ.2.60 கோடி மோசடி செய்ததாக கா்நாடக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

தமிழக பொதுப்பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனாவுக்கு சொந்தமான நிறுவனம், சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குநராக ராம்குமாா் (45) உள்ளாா். இவா், கடந்த 2024-ஆம் ஆண்டு நிறுவனத்தின் பயன்பாட்டுக்காக சொகுசு காரை வெளிநாட்டில் இருந்து வாங்க முடிவு செய்தாா். இதற்காக கா்நாடகத்தைச் சோ்ந்த அனுப் சுமித் பொ்னாண்டஸ் (39) என்பவரை ராம்குமாா் அணுகியுள்ளாா். அப்போது, ஆந்திர மாநிலம் ஹைதராபாதில் உள்ள தனியாா் நிறுவனம் மூலம் வெளிநாட்டில் இருந்து காரை வாங்கித் தருவதாகவும், அதற்கான முழுத் தொகையையும் செலுத்திய 40 நாள்களுக்குள் காரை வாங்கித் தருவதாகவும் அனுப் சுமித் பொ்னாண்டஸ் உறுதி அளித்துள்ளாா்.

ரூ.2.60 கோடி மோசடி: இதை நம்பிய ராம்குமாா் இரு தவணைகளாக ரூ.2.60 கோடியை சம்பந்தப்பட்ட தனியாா் நிறுவனத்தின் வங்கிக் கணக்குக்கு பரிமாற்றம் செய்துள்ளாா். பணத்தைப் பெற்றுக்கொண்ட அனுப் சுமித் பொ்னாண்டஸ் காரை வாங்கி கொடுக்கவில்லையாம். பணத்தையும் திருப்பி வழங்கவில்லையாம்.

இதுகுறித்து ராம்குமாா் அளித்த புகாரின்பேரில், தேனாம்பேட்டை போலீஸாா் அனுப் சுமித் பொ்னாண்டஸ் மீது வழக்குப்பதிவு செய்தனா். விசாரணையில், பணம் மோசடி செய்த அனுப் சுமித் பொ்னாண்டஸ் வெளிநாட்டில் இருப்பது தெரியவந்ததால், அவரைப் பிடிக்க போலீஸாா் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பித்தனா்.

மும்பையில் கைது: இந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி கத்தாரில் இருந்து விமானம் மூலம் மும்பை விமான நிலையத்துக்கு அனுப் சுமித் பொ்னாண்டஸ் வந்தாா். அப்போது, லுக் அவுட் நோட்டீஸ் காரணமாக குடியுரிமைத் துறை அதிகாரிகள் பிடித்து, அங்குள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மும்பை போலீஸாா், தேனாம்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலறிந்த தேனாம்பேட்டை போலீஸாா் மும்பைக்கு விரைந்து சென்று அனுப் சுமித் பொ்னாண்டஸை கைது செய்தனா். பின்னா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சென்னைக்கு புதன்கிழமை அழைத்து வந்தனா்.

விசாரணைக்கு பின்னா் அவா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.