21-ம் நூற்றாண்டுக்கு நம் இளைஞர்களுக்கு ஏற்ற கல்வி வழங்க வேண்டும்: முன்னாள் துணைவேந்தர் லெ. ஜவஹர்நேசன்
21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற கல்வியை நம் இளைஞர்களுக்கு வழங்க வேண்டும் என்பது குறித்து...

நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணியில் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் சோம. செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் அளிக்கப்பட்ட வரவேற்பு. - டிஎன்எஸ்
நீடாமங்கலம்: 21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற கல்வியை நம் இளைஞர்களுக்கு வழங்க வேண்டும் என முன்னாள் துணைவேந்தர் லெ.ஜவஹர்நேசன் தெரிவித்தார்.
நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய கல்வி கொள்கை 2020-ஐ திரும்ப பெறவேண்டும், அனைவருக்கும் தரமான அரசு கல்வியை உறுதி செய்ய வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றிட வேண்டும், 21 ஆம் நூற்றாண்டுக்கான மாற்று கல்வி தேவை என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி முதல் சென்னை வரையிலான சைக்கிள் பேரணிகுழுவினருக்கு வியாழக்கிழமை மாலை நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைசெயலாளர் புதியவன், குழந்தைகள் இளைஞர்கள் வாழ்க்கை முக்கியம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கள் இயேசுதாஸ், ஆரா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கள் பொன்முடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து குழந்தைகள் இளைஞர்கள் வாழ்க்கை முக்கியம் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் லெ.ஜவஹர்நேசன் பேசுகையில் கூறியதாவது:
செய்யறிவு, நவீன அறிவியல் போன்றவை இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்.
நீட் தேர்வு போன்று கடுமையான தேர்வு அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கூட இல்லை. இந்தியாவில் தான் நீட் தேர்வு உள்ளது.
நீட் தேர்வில் ஒருவர் தேர்ச்சி பெறவேண்டும் என்றால் லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து பயிற்சி பெறவேண்டிய நிலைவுள்ளது.
இந்த தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும். தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ திரும்பப் பெறவேண்டும் போன்ற ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி முதல் தொடங்கிய சைக்கிள் பேரணிக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்புள்ளது. 21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற கல்வியை நம் இளைஞர்களுக்கு தரவேண்டும் என்றார்.
குழந்தைகள் இளைஞர்கள் வாழ்க்கை முக்கியம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அப்துல்ரசாக், கல்வியாளர் நீலன். அசோகன், தமுஎகச மாவட்ட துணைத்தலைவர் அம்பிகாபதி, அதிமுக நகரசெயலாளர் ஷாஜஹான், பல்நோக்கு சேவை இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஷ்பாபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். தமுஎகச கிளைத் தலைவர் சேது.சந்தானராமன் நன்றி கூறினார்.
We must provide education suited to the 21st century for our youth: Former Vice-Chancellor
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


