தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் சிஜேபி போராட்டம்! பத்திரிகையாளர்கள், இளைஞர்கள், வழக்குரைஞர்கள் கைது! தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் தவெக! - கனிமொழி விமர்சனம் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம் சிஜேபி போராட்டம்: விமானத்திலேயே கைது செய்யப்பட்ட அபிஜீத் தீப்கே!

ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு!

ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டிருப்பது பற்றி....

Squash Player Joshna Chinappa Promoted

ஜோஷ்னா சின்னப்பா

Published On :

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் விளையாட்டில் பதக்கங்கள் வென்று சாதனைகள் படைத்துள்ள ஜோஷ்னா சின்னப்பாவுக்கு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின், விளையாட்டுத் துறை இயக்குநராகப் பதவி உயர்வு அளித்து நேற்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. அந்த ஆணையினை, இன்று பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு நேரில் வழங்கினார்.

விளையாட்டு வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா அவர்கள் 2014-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கமும், அதே ஆண்டில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்று தேசத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தவர். மேலும், இந்திய அளவில் ஸ்குவாஷ் விளையாட்டில் முதலிடம் பெற்ற பெருமைக்குரியவர். விளையாட்டுத் துறையில் அவர் ஆற்றிய சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் விளையாட்டு ஒதுக்கீட்டின்கீழ் நேரடி நியமனம் மூலம் மூத்த விளையாட்டு அலுவலராகப் பணியில் சேர்ந்தார்.

பின்னர், அவரது பதவி விளையாட்டுத் துறை துணை இயக்குநராக மாற்றப்பட்டது. ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி-2026 ல் இந்திய ஸ்குவாஷ் அணிக்காகப் பங்கேற்று 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். சென்னையில் 8.10.2026 அன்று நடைபெற்ற அரசு விழாவில் விளையாட்டு வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பாவுக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் ரூபாய் 60 லட்சத்திற்கான உயரிய ஊக்கத் தொகையை வழங்கி கௌரவித்தார்.

விளையாட்டுத் துறையில் தொடர்ந்து சாதனைகள் படைத்து வரும் விளையாட்டு வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவின் பதவி உயர்வு, தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறைக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

ஜோஷ்னா சின்னப்பா ஏற்கெனவே தமிழ்நாடு மின் பகிர்மானக்கழக விளையாட்டுத்துறை துணை இயக்குநராக இருந்தார். தற்போது அவருக்கு இயக்குநராக பதவி உயர்வு அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Squash player Joshna Chinappa, who won a medal at the Asian Games, has been granted a promotion.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER