
மேட்டூரில் நீர்க்காகங்கள் திடீர் படையெடுப்பு: பறவைகள் சரணாலயம் போல் காட்சியளிக்கும் காவேரி பாலம்!
மேட்டூரில் நீர்க்காகங்கள் திடீர் படையெடுப்பு குறித்து...

பறவைகள் சரணாலயம் போல் காட்சியளிக்கும் மேட்டூர் காவேரி பாலம் - டிஎன்எஸ்
சேலம் மாவட்டம் மேட்டூர் காவேரி பாலம் பகுதியில் ஆயிரக்கணக்கான நீர்க்காகங்கள் திடீரென படையெடுத்துள்ளதால் அந்த பகுதி ஒரு அழகான பறவைகள் சரணாலயம் போல் மாறியுள்ளது.
மேட்டூர் காவிரி கரைகளில் பறவைகளுக்கு தேவையான தண்ணீரும் உணவும் பாதுகாப்பான தங்கும் இடமும் கிடைப்பதால் காவிரி கரையில் பல்வேறு வெளிநாட்டு பறவைகள் முகாமிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. பல வெளிநாட்டு பறவைகள் இங்கேயே தங்கி உள்ளன.
மேட்டூர் அணை மற்றும் காவிரி ஆற்றுப் பகுதிகளில் மீண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் காலங்களில் அவற்றை வேட்டையாடுவதற்காக நீர்க்காகங்கள் பெருமளவில் கூட்டம் கூட்டமாக வருகின்றன.
இந்த பறவைகள் பண்ணவாடி பரிசல் துறை, கோட்டையூர், அடிப்பாலாறு பகுதிகளில் அதிகயளவில் காணப்படும்.
காவிரி கரையில் முகாமிட்டுள்ள பறவைகளில் நீர்க்காகங்களும் அடங்கும். குறைந்த எண்ணிக்கையிலான நீர் காகங்கள் பண்ணவாடி, கோட்டையூர் உள்ளிட்ட காவிரி கரைகளில் முகாமிட்டு இருந்தன.
சனிக்கிழமை காலை ஆயிரக்கணக்கான நீர் காகங்கள் ஒரே நேரத்தில் மேட்டூர் காவேரி பாலம் பகுதியில் வந்து இறங்கின. காவேரி பாலம் பகுதியில் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் 15,000 கன அடி செல்வதால் அங்கு நீர்க்காகங்கள் முகாமிட்டு மீன்களை பிடித்து வருகின்றன.
பாலத்தின் தூண்கள் மற்றும் ஆற்றின் நீர்நிலைகளில் ஆயிரக்கணக்கான நீர்க்காகங்கள் காவிரியில் அமர்ந்திருப்பதும், தண்ணீரில் மூழ்கி மின் பிடிப்பதும், வட்டமடித்து செல்லும் காட்சி பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. அந்தப் பகுதியில் செல்லும் மக்களை கவர்ந்துள்ளது.
முன்பு எப்போதும் இதுபோன்று ஆயிரக்கணக்கான நீர்க்காகங்கள் ஒரே நேரத்தில் மேட்டூர் நீர்த்தேக்க பகுதிக்கு வந்ததில்லை என்று அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது காவேரி பாலம் பகுதியில் பறவைகள் சரணாலயம் போல காணப்படுகிறது.
காவேரி பாலம் வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் ஆச்சிரியத்துடன் நீர்காகங்களை பார்த்து ரசித்து செல்கின்றனர்.
இந்த கண்கொள்ளாக் காட்சியை காண்பதற்காக இயற்கையை ரசிப்பவர்களும், பறவை ஆர்வலர்கள், மக்கள் என ஏராளமானோர் மேட்டூர் காவிரி பாலத்தில் குவிந்து வருகின்றனர்.
Sudden Influx of Cormorants in Mettur: Cauvery Bridge Resembles a Bird Sanctuary!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






