ஆந்திரம் சென்றார் முதல்வர் விஜய்! உற்சாக வரவேற்பு!தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்!ஜெயிலர் 2 படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 700 தீபாவளி மளிகை தொகுப்பு! புதுவை அரசுமின் தடை, ஒரு யூனிட் ரூ.35, தனியாரிடம் மின் கொள்முதல்! அமைச்சர் நிர்மல் குமாரிடம் சரமாரிக் கேள்விதிமுக ஆட்சியில் ரூ. 20-க்கு வாங்கப்பட்ட மின்சாரம், ரூ. 35-க்கு கொள்முதல்! செந்தில் பாலாஜிபள்ளிகளில் வாரத்தில் 5 நாள்களும் உடற்கல்வி வகுப்புகள்! ராஜ்மோகன் அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்!

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளது பற்றி...

ration shops

ரேஷன் கடை - கோப்புப் படம்

Published On :

தமிழ்நாடு முழுவதும் நாளை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

வெளிச்சந்தைகளில் வெங்காயம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு தமிழக அரசு வெங்காய விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் உள்ள மதுரவாயல் நியாய விலைக் கடையில் மக்களுக்கு தரமற்ற வெங்காயம் விற்பனை செய்யப்பட்டதாக கடையின் விற்பனையாளரை தற்காலிக பணிநீக்கம் செய்து காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை இணைப் பதிவாளர் நேற்று உத்தரவிட்டார்.

வெங்காயத்தை தரம் பிரித்து வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டும், அதனை பின்பற்றாமல் தரமற்ற வெங்காயத்தையும் சேர்த்து மக்களுக்கு கடை விற்பனையாளர் வழங்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம், மதுரவாயல் கடை விற்பனையாளரின் இடைக்கால பணிநீக்க உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி நாளை (அக். 14) மாநிலம் முழுவதும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தரமற்ற வெங்காயத்தை விநியோகம் செய்தவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Summary

Ration shop employees across Tamil Nadu to go on strike tomorrow!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.