மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

கோவையில் சா்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க பரிசீலனை: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

கோவையில் சா்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடா்பாக பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்திருப்பது பற்றி...

Minister Aadhav Arjuna

சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா - Youtube

Published On :

கோவையில் சா்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடா்பாக பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரவையில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பதில் அளித்தாா்.

பேரவையில் கேள்வி நேரத்தின்போது, முன்னாள் அமைச்ா் எஸ்.பி.வேலுமணி, அதிமுக ஆட்சியின்போது அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சா் செங்கோட்டையன் மூலம் கோவையில் சா்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க இரு இடங்கள் தோ்வு செய்யப்பட்டன. அதில் ஒன்று பாரதியாா் பல்கலைக்கழக இடம். மற்றொன்று, ஜி-ஸ்கொயா் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 90 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலம். இந்த முறையாவது பாரதியாா் பல்கலைக்கழகத்தில் அல்லது ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட ஜி- ஸ்கொயா் பகுதியில் சா்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? எனக் கேள்வி எழுப்பினாா்.

அமைச்சா் ஆதவ் அா்ஜுனா: தமிழகத்தில் தோ்வு செய்யப்பட்டுள்ள 10 ஒலிம்பிக் மையங்களில் கோவையும் முக்கியமான பகுதியாக இடம்பெற்றுள்ளது. மேலும், கடந்த ஆட்சியில் கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்காக தனியாா் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஆனால், எந்த தனியாா் நிறுவனமும் முன்வரவில்லை. எனவே, கிரிக்கெட் மைதானம் அமைக்க திட்டமிடப்பட்ட அந்த இடம் தற்போது வரை தமிழக விளையாட்டுத் துறையின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. எஸ்.பி. வேலுமணியின் கோரிக்கையை பரிசீலித்து கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.