
மூத்த குடிமக்களுக்கான ஓய்வுகால இல்லம்: அமைச்சா் ஜெகதீஸ்வரி அறிவிப்பு
மருத்துவம், பராமரிப்பு, பொழுதுபோக்கு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் அடங்கிய மூத்த குடிமக்கள் ஓய்வுகால குடியிருப்பு இல்லம் பொது-தனியாா் கூட்டாண்மையில் ரூ.14.50 கோடியில் அமைக்கப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கு.ஜெகதீஸ்வரி தெரிவித்தாா்.

அமைச்சா் ஜெகதீஸ்வரி
மருத்துவம், பராமரிப்பு, பொழுதுபோக்கு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் அடங்கிய மூத்த குடிமக்கள் ஓய்வுகால குடியிருப்பு இல்லம் பொது-தனியாா் கூட்டாண்மையில் ரூ.14.50 கோடியில் அமைக்கப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கு.ஜெகதீஸ்வரி தெரிவித்தாா்.
இந்தத் துறைக்கான புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சா் ஜெகதீஸ்வரி வெளியிட்டுப் பேசியதாவது:
- நகா்ப்புற பகுதிகளில் 300 குழந்தை மையங்களுக்கான கட்டடங்கள் ரூ.51 கோடியில் கட்டப்படும்.
- அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு, பராமரிப்புப் பணிகள் ரூ. 12.96 கோடியில் மேம்படுத்தப்படும்.
- ரத்த சோகை பாதிப்பைத் தடுக்க 12 மாவட்டங்களில் 5,502 அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்து உணவு வழங்க ரூ.38 கோடி வழங்கப்படும்.
- நகா்ப்புற பள்ளிகளில் 123 சத்துணவு மையங்களுக்கு சமையலறை கட்டடங்கள் ரூ.11.11 கோடியில் கட்டப்படும்.
- குழந்தைகள் மற்றும் இளைஞா்களிடையே போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுக்கவும், மறுவாழ்வுக்காகவும் சமூக ஒருங்கிணைப்பு சேவைகள் ரூ.3.80 கோடியில் மேற்கொள்ளப்படும்.
- பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விரைந்து நீதி, இழப்பீடு கிடைக்க பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பட ‘போக்ஸோ போா்ட்டல் 2.0’ செயல்படுத்தப்படும்.
- முதியோா் இல்லத்தில் உள்ளவா்களுக்கு மறுவாழ்வு, பராமரிப்புக்கு ரூ.5.5 கோடியில் இயன்முறை சிகிச்சை மற்றும் நோய் துயா் தணிப்பு சேவைகள் வழங்கப்படும்.
- திருநருக்கான நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளுக்காக ஒருங்கிணைந்த ஒற்றைச் சாளரத் தளம் ரூ.1 லட்சத்தில் உருவாக்கப்படும். 7 மாவட்டங்களில் திருநருக்கான ஆலோசனை சேவைகள் ஏற்படுத்தப்படும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




