
இதுபோன்ற கேள்விகளால் சிக்கலில் மாட்டிவிடாதீர்கள்! செங்கோட்டையன் பதில்! அப்படி என்ன கேள்வி?
இதுபோன்ற கேள்விகளால் சிக்கலில் மாட்டிவிடாதீர்கள் என்று செங்கோட்டையன் பதிலளித்திருப்பது பற்றி...
அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் - கோப்புப்படம்
பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்புகள் வெளியிடுவது அனைத்து முதல்வர்களும் பின்பற்றிய நடைமுறைதான். அனைத்து கேள்விகளுக்கும் முதல்வரே பதிலளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இந்திய பிரதமர் வேட்பாளராக விஜய்யை முன்னிறுத்த முடியுமா? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, இதுபோன்ற கேள்விகளைக் கேட்டு என்னை சிக்கலில் மாட்டிவிடாதீர்கள் என்று சிரித்தபடியே பதிலளித்துவிட்டுச் சென்றார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் ஆற்றல், சிந்தனை மற்றும் தொலைநோக்குப் பார்வை தமிழகத்தின் ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புகள் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்டு வருவதாகக் கூறினார்.
காவல்துறையைப் பொறுத்தவரை சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது, போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதுதொடர்பாக நேற்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
புதிய சட்டப்பேரவைக் கட்டடம் தேவையா என்பது குறித்து பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் சட்டப்பேரவை கட்டடங்களை அமைக்க முயற்சித்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் ராணி மேரி கல்லூரியில் சட்டப்பேரவையைக் கொண்டு வர முயற்சி மேற்கொண்டார்.
110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிடுவது என்பது துறையின் தேவைக்கும், மானியக் கோரிக்கைக்கும் ஏற்ப முதல்வர் மேற்கொள்ளும் நடவடிக்கையாகும். இதனை அனைத்து முதல்வர்களும் பின்பற்றி வந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்கக் கூடாது. மந்தை புறம்போக்கு, நீர்வழி புறம்போக்கு, மேய்ச்சல் புறம்போக்கு உள்ளிட்ட நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் பட்டா வழங்கக் கூடாத நிலங்கள் குறித்து ஆய்வு செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், ஆலயங்கள் தொடர்பான புறம்போக்கு நிலங்களுக்கும் இதே நடைமுறை பொருந்தும் என்றும், சம்பந்தப்பட்ட துறையின் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அனைத்து கேள்விகளுக்கும் முதல்வர் பதிலளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கடந்த ஆட்சியிலும் மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது அமைச்சர் ரகுபதி உள்ளிட்டவர்கள் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்ததாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
விஜய்யை பிரதமர் வேட்பாளராக பார்க்க முடியுமா? என்ற கேள்விக்கு, தமிழக வெற்றி கழகம் குறுகிய காலத்தில் அரசியல் களத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. தமிழக மக்கள் தவெகவை நம்பி வாக்களித்துள்ளனர். கட்சித் தொடங்கிய இரண்டரை ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்துள்ளது, இரண்டே மாதங்களில் சின்னத்தைப் பெற்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
தமிழக மக்களை காப்பதற்கும், அவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கும் முதலமைச்சர் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த செங்கோட்டையன் இந்திய பிரதமர் வேட்பாளராக விஜய்யை முன்னிறுத்த முடியுமா? என்ற கேள்விக்கு, தன்னை சிக்கலில் மாட்டிவிடும் வகையில் இதுபோன்ற கேள்விகளைக் கேட்க வேண்டாம் என நகைச்சுவையாக பதிலளித்தார்.
Summary
Don't let get into trouble with questions like these! — Sengottaiyan's reply. What exactly was the question?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




