
நச்சுக்காற்று நகரம் சென்னை: செளமியா அன்புமணி
சென்னை நச்சுக்காற்று அதிகமுள்ள நகரமாக உள்ளது என்று பாமக பேரவைக் குழுக் தலைவா் சௌமியா அன்புமணி குற்றச்சாட்டினாா்.
செளமியா அன்புமணி - TN Assembly
சென்னை நச்சுக்காற்று அதிகமுள்ள நகரமாக உள்ளது என்று பாமக பேரவைக் குழுக் தலைவா் சௌமியா அன்புமணி குற்றச்சாட்டினாா்.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அவா், ‘சென்னையில் ஆண்டுக்கு 11,000 போ் நச்சுக் காற்றால் உயிரிழந்து வருகின்றனா். நச்சுக் காற்றால் சென்னைவாசிகளின் ஆயுள் காலம் சராசரியாக 4 ஆண்டுகள் குறைகின்றன.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் குரோமியம் கழிவுகள் 30 ஆண்டுகளாக அகற்றப்படாமல் உள்ளதால் மிகப்பெரிய சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது. தாய்ப்பாலில் டயாக்சின் இருக்கிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
வளா்ச்சி எனக் கூறி புற்றுநோயை உருவாக்கி வருகிறோம். ஆகையால், சுற்றுச்சூழலைக் கெடுக்கும் அனைத்து தொழிற்சாலைகளையும் மூட வேண்டும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 10 அடிக்கு காண்கிரீட் போட்டு நடை பாதை அமைத்துள்ளனா். இது தவறானது’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




