FOLLOW US

ON GOOGLE DISCOVER

ஊழலை வெளிக்கொண்டு வந்த முதல்வர் விஜய்க்கு வாழ்த்துகள்: தமிழிசை சௌந்தரராஜன்

காஞ்சிபுரத்தில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அளித்த பேட்டி பற்றி....

Congratulations to Chief Minister Vijay for bringing corruption to light: Tamilisai Soundararajan

தமிழிசை சௌந்தரராஜன்

Published On :7 செப்டம்பர் 2026, 12:52 pm IST

கடந்த கால ஆட்சியின் ஊழல்களை வெளிப்படைத்தன்மையுடன் வெளிப்படுத்திய முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிப்பதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் முன்னாள் சேர்மன் கே.டி.எஸ். மணியின் நூறாவது பிறந்த நாளையொட்டி, இந்து கல்வி அறக்கட்டளை சார்பில் காஞ்சிபுரத்தில் 11 ஏழை, எளிய ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைத்து, அவர்களுக்குத் தேவையான சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி, அறக்கட்டளைத் தலைவர் அருண்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் புதுச்சேரி முன்னாள் ஆளுநரும், பாஜக முன்னாள் தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று, மணமக்களுக்கு மாங்கல்யம் எடுத்து வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இன்று சட்டப் பேரவையில் கடந்த கால ஆட்சியின் ஊழல்களை வெளிப்படைத்தன்மையுடன் வெளிப்படுத்தி, திமுகவை அவையை விட்டு வெளியேறச் செய்யாமல் தர்னா செய்ய வைத்த நிகழ்ச்சி வரவேற்கத்தக்கது.

இதனை முதல்வர் விஜய் செய்ததற்கு அவருக்கு வாழ்த்துகள் தெரிவிப்பதாகவும், தொடர்ந்து இனிவரும் காலத்தில் எந்த அரசியல்வாதிகள் ஊழல் செய்தாலும் அது நிச்சயம் வெளிவந்துவிடும் என்ற அச்சத்தை இது உருவாக்கியுள்ளது" என்றார்.

மேலும், ஊழல் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் இதனை மேற்கொண்ட முதல்வருக்கு வாழ்த்துகள் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

Summary

Former BJP State President Tamilisai Soundararajan has stated that she congratulates Chief Minister Vijay for transparently exposing the corruption of the previous administration.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.