குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

இரும்புக் கம்பியில் சிக்கிய யானைக்கு சிகிச்சை! இரவுப் பகலாக பணியாற்றிய வனத்துறை!

இரும்புக் கம்பியில் சிக்கி காயமடைந்த யானைக்கு சிகிச்சையளிக்க இரவுப் பகலாக பணியாற்றிய வனத்துறை

யானை

யானை

Published On :7 செப்டம்பர் 2026, 3:32 pm IST

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம், கோவை வனக்கோட்டம், சிறுமுகை வனச்சரகம், பெத்திக்குட்டை பிரிவு, நீலகிரி கிழக்குச் சரிவு காப்பு காடு, உளியூர் காவல் சுற்று வனப்பகுதியில் பெண் யானை ஒன்றின் இடது முன்னங்காலில் இரும்பு கம்பி சிக்கி காயமடைந்திருந்தது கண்டறியப்பட்டது.

மாவட்ட வன அலுவலர், கோவை வனக் கோட்டம், கோவை அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து கோவை தலைமை வனப் பாதுகாவலர் ஆனைமலை புலிகள் காப்பகம் மூலம் சென்னை முதன்மை தலைமை வன உயிரின காப்பாளர் அவர்களின் உத்தரவின்படி மாவட்ட வன அலுவலர், கோவை வனக்கோட்டம் அவர்கள் தலைமையில், சிறுமுகை வனச்சரக அலுவலர் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் முன்னிலையில் ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தைச் சேர்ந்த ஐந்து வன கால்நடை மருத்துவர்கள் குழுவின் மூலம் 60 வனப்பணியாளர்கள் இரவு பகலாக பணியாற்றி யானைக்கு சிகிச்சையளிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்தப் பணியில், யானை பாகன்கள் மற்றும் யானையின் இருப்பிடத்தைக் கண்டறிய நவீன ட்ரோன் கேமரா கொண்ட குழுவின் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொண்டு நேற்று பெண் யானையை வனப்பகுதியிலேயே மயக்க மருந்து கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

யானையின் காலில் இருந்த காயத்துக்கு மருந்து தடவி சிகிச்சைக்குப் பின் மயக்கம் தெளிந்ததும் நல்ல முறையில் யானை வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது.

எனினும், வனத்துறையினர், யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து அதன் உடல் நலனைக் கவனித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.