FOLLOW US

ON GOOGLE DISCOVER

குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

புதிய தலைமைச் செயலகம் எங்கு அமைகிறது?

புதிய தலைமைச் செயலகம் எங்கு அமையவிருக்கிறது என்பது குறித்து

Tamil Nadu Government Secretariat

தமிழ்நாடு அரசு - கோப்புப் படம்

Published On :7 செப்டம்பர் 2026, 4:00 pm IST

தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலகம் சென்னையில் எங்கு அமையவிருக்கிறது என்பது குறித்து நாளை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமயில் ஆலோசனை நடைபெறவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடிப் பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என முதல்வர் சி. ஜோசப் விஜய் கடந்த வாரம் பேரவையில் அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மற்றும் காவல்துறை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது, அவை விதி 110-ன் கீழ் உரையாற்றிய முதல்வர் விஜய், அடுத்த நூற்றாண்டுகளில் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், புதிய தலைமைச் செயலகம் அமையவிருக்கும் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட இடங்கள் மற்றும் வெளியே உள்ள இடங்களின் பட்டியலை தயார் செய்து, எங்கு புதிய கட்டடம் அமைக்கப்படலாம் என்பது குறித்து நாளை ஆலோசனை நடைபெறவிருக்கிறது.

தமிழ்நாட்டுக்கான புதிய தலைமைச் செயலகம் சென்னையில் எங்கே கட்டப்பட உள்ளது என்பது குறித்து நாளை முதல்வர் தலைமையில் ஆலோசிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.