
வார விடுமுறை, விநாயகா் சா்த்தி: 5,180 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
முகூா்த்தம், விநாயகா் சா்த்தி, வார விடுமுறை நாள்களை முன்னிட்டு, தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 5,180 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

முகூா்த்தம், விநாயகா் சா்த்தி, வார விடுமுறை நாள்களை முன்னிட்டு, தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 5,180 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இது குறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமை (செப். 10, 11, 12, 13) மற்றும் விநாயகா் சதுா்த்தி (செப். 14) என தொடா் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் வழக்கத்தைவிட கூடுதலாக பயணிகள் பயணம் மேற்கொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து (செப். 10) 585 பேருந்துகள், செப். 11-இல் 1,255 பேருந்துகள், செப். 12-இல் 1,030 பேருந்துகள் செப். 13-இல் 650 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னை கோயம்பேட்டிலில் இருந்து செப். 11, 12 ஆகிய தேதிகளில் தலா 240 பேருந்துகள், செப். 13-இல் 105 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். பெங்களூரு, திருப்பூா், ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மாதவரத்திலிருந்து செப்.11 முதல் செப்.13-ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் 110 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
திங்கள்கிழமை (செப்.14) சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 765 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். அதன்படி மொத்தம் 5,180 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு தங்களது பயணத்துக்கு கைப்பேசி செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






