
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்: இந்திய கம்யூ. கண்டன ஆர்ப்பாட்டம்!
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூ. கண்டன ஆர்ப்பாட்டம்...
இந்திய கம்யூ. கண்டன ஆர்ப்பாட்டம் - X
சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலகம் ரூ. 1,200 கோடியில் சென்னை பட்டினப்பாக்கத்தில் அமையவுள்ளது. இதற்கான முதல் கட்ட அனுமதியை அளித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதற்கு தவெக கூட்டணிக்கு ஆதரவளித்துள்ள காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்து மற்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அப்பகுதியில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அங்கு ஏற்கனவே கூட்ட நெரிசல் இருக்கும் நிலையில் மேலும் போக்குவரத்து பாதிக்கப்படும் உள்ளிட்ட கருத்துகளுடன் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள மீனவர்களும் பொதுமக்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் வேறு இடத்தில் தலைமைச்செயலகத்தை அமைக்க இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன், "பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்கான தமிழக அரசின் முன்மொழிவு தவறானது. மீனவ மக்களின் வாழ்வாதார உரிமைகள், கடலோரச் சூழலியல், காலநிலைப் பாதிப்புகள், பொதுமக்களின் கடற்கரை அணுகல் மற்றும் அரசின் முக்கியமான நிர்வாக நிறுவனத்தின் பாதுகாப்பு ஆகியவை பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கும்.
தமிழ்நாடு அரசு இம்முன்மொழிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது" என்று குறிப்பிட்டிருந்தார்.
Summary
CPI stages protest against tvk govt for New Secretariat at Pattinapakkam
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







