
‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்
பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தலைமுறைதோறும் தழைத்தோங்கட்டும் என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளதைப் பற்றி...
பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய விஜய். - (கோப்புப்படம்)
பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தலைமுறைதோறும் தழைத்தோங்கட்டும் என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் சி. ஜோசப் விஜய் தன்னுடைய அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “சுயமரியாதையும், சமூகநீதியும், பகுத்தறிவும் நிறைந்த முற்போக்குச் சிந்தனைகளை மக்கள் மனங்களில் விதைத்து, சாதி, மத வேறுபாடுகளைக் களைந்திடவும், மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் தம் வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது புரட்சிகரமான சிந்தனைகளையும், கொள்கைகளையும் பெருமையுடன் நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.
தந்தை பெரியாரின் கொள்கைத் தடத்தில் பயணித்து, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற முழக்கத்தின்படி, சம வாய்ப்புகளால் அனைவரும் வளம்பெற்று, சுயமரியாதை மிளிரும் தமிழ்நாட்டை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்!
தந்தை பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தலைமுறைதோறும் தழைத்தோங்கட்டும்! வெற்றித் தமிழகத்தை உருவாக்கும் பயணத்தில் அவரது கொள்கைகள் நமக்கு வழிகாட்டட்டும்!” எனப் பதிவிட்டுள்ளார்.
Summary
Chief Minister C. Joseph Vijay has stated that they will follow the path of Periyar's principles.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







