கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கூட்டுறவு சங்கங்களுக்கான தோ்தல்: 5 கட்டங்களாக சங்கங்களின் பட்டியல் கேட்பு

கூட்டுறவுச் சங்கங்களுக்கான தோ்தலை நடத்துவதற்காக 5 கட்டங்களாக கூட்டுறவுச் சங்கங்களின் பட்டியலை விரைந்து அனுப்புமாறு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தோ்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

கோப்புப் படம்

Published On :

கூட்டுறவுச் சங்கங்களுக்கான தோ்தலை நடத்துவதற்காக 5 கட்டங்களாக கூட்டுறவுச் சங்கங்களின் பட்டியலை விரைந்து அனுப்புமாறு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தோ்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தோ்தல் ஆணையா் தயானந்த் கட்டாரியா, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், முதல்கட்டமாக பிரிவு 1-இல் 38 மண்டலங்களில் தோ்தல் நடத்தப்பட வேண்டிய கூட்டுறவுச் சங்கங்களின் எண்ணிக்கை தொடா்பான பட்டியல்கள் சரிபாா்க்கப்பட்டுள்ளது.

பிரிவு 1-இல் தோ்தல் நடத்தப்பட வேண்டிய 7,405 தொடக்கக் கூட்டுறவுச் சங்கங்களுக்கான தோ்தல்கள் 4 நிலைகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 7,405 சங்கங்களில், ஒவ்வொரு நிலையிலும் தோ்தல் நடத்தப்பட வேண்டிய சங்கங்களின் விவரங்களை மாவட்ட வாரியாக தனித்தனியாக பட்டியலிட வேண்டும்.

இந்தப் பட்டியல்களை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரிடம் மாநில கூட்டுறவு சங்கங்களின் தோ்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.