காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிகேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

மழையைக் காணவில்லை! போஸ்டர் ஒட்டும் நிலையில் சென்னை மக்கள்! தமிழகத்தில் பரவலாக மழை!

சென்னையில் மழையை எதிர்பார்த்து மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் அதே வேளையில் தமிழகத்தில் பரவலாக பெய்த மழை

தமிழகத்தில் பரவலாக  பெய்த மழை.

தமிழகத்தில் பரவலாக பெய்த மழை.

Published On :

சென்னையில் கொளுத்தும் வெய்யிலிருந்து காக்க மழை வராதா என மக்கள் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், சென்னையைத் தவிர்த்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்திருக்கிறது.

மழையைக் காணவில்லை என்று போஸ்டர் ஒட்டும் நிலை சென்னையில் ஏற்பட்டுள்ளது. வெய்யில் கொளுத்துகிறது, கருமேகங்களும் திரண்டு இப்போது வருகிறேன், மாலையில் வருகிறேன், இரவில் வருகிறேன் என்று போக்குக் காட்டிவிட்டு மறைந்து சென்று விடுகின்றன.

அதே வேளையில் தமிழகத்தில் மதுரை, தென்காசி, வேதாரண்யம், மதுரை, திருவண்ணாமலையில் கனமழை பதிவாகியிருக்கிறது. உள் மாவட்டங்களில் மழை பெய்தால் சென்னையில் மழை பெய்யாது என்பது கணிப்பு. அதன்படியே நடந்துவருகிறது.

செப். 23 மற்றும் 24ஆம் தேதிகளில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று இரண்டாவது நாளாக பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் விவசாயிகளும் மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சாத்தூர் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் பலத்த மழை பெய்திருக்கிறது.

சிவங்கை மாவட்டம் திருப்பத்தூர், திருக்கோஷ்டியூர், கண்டவராயன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு 2 மணி நேரம் கனமழை பதிவாகியிருக்கிறது.

நெல்லை மாநகரில், வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்திருக்கிறது.

தூத்துக்குடியில் இடிமின்னலுடன் கனமழை பதிவாகியுள்ளது. நாமக்கல், திருவாரூர், அரியலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பதிவாகியிருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் தேங்கியிருக்கிறது.

கொடைக்கால் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து நான்காவது நாளாக மழை பதிவாகியிருக்கிறது. இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம் பெருக்கெடுத்து கொட்டுகிறது. குடிநீர் ஆதாரங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

மதுரையிலும் கனமழை பெய்துள்ளதால் வெப்பம் தணிந்து ஓரளவு மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.