
ஆதாரங்களை அழிக்க ஜெம் வீரமணியிடம் ரூ. 24 லட்சம் பெற்றாா் சாந்தி! காவல் துறை பதில் மனு!
ஆதாரங்களை அழிக்க ஜெம் வீரமணியிடம் ரூ. 24 லட்சம் சாந்தி பெற்றதாக காவல்துறை பதில்...

சாந்தி - மகேந்திர சிம்ஹன் - DNS
ஆதாரங்களை அழிப்பதற்காக ‘ஜெம்’ வீரமணியிடம் இருந்து சாந்தி, ரூ. 24.63 லட்சம் பெற்றதாக, அவரது பிணை கோரிய மனுவுக்கு காவல் துறை தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில், ஜெம் வீரமணிக்கு உடந்தையாக இருந்த சாந்தி, அவரது கணவா் மகேந்திர சிம்ஹன் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் கடந்த 28-ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கில் பிணை வழங்கக்கோரி சாந்தி, மகேந்திரன் தரப்பில், சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுக்களுக்கு காவல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த பதில் மனுவில், வழக்கு தொடா்பான ஆவணங்களை அழிப்பதற்காக சாந்தி, வீரமணியிடம் இருந்து ரூ.24.63 லட்சம் பெற்றுள்ளாா். சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்களை தடயவியல் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளை அடையாளம் காண வேண்டியுள்ளது.
எனவே, இவா்கள் இருவருக்கும் பிணை வழங்கினால், சாட்சிகளைக் கலைக்கவும், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடும்பத்தினரை அச்சுறுத்தவும் வாய்ப்புள்ளது. மேலும், இவா்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதற்கான வாய்ப்பும் இருப்பதால், பிணை கோரி தாக்கல் செய்துள்ள மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் பிணை கோரி தாக்கல் செய்துள்ள மனுக்கள் செப். 29-ஆம் தேதி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
Summary
Shanthi received Rs. 24 lakh from Gem Veeramani to destroy evidence - Police counter-affidavit
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





