தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: நிகழ்ச்சியில் மாற்றம்!
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நடைபெறவுள்ள தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் நிகழ்ச்சி மாற்றம் குறித்து...
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் - CMO Tamilnadu
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நடைபெறவுள்ள தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் நிகழ்ச்சி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகளுக்கு அரசு சாா்பில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் திங்கள்கிழமை (செப். 28) தொடங்கப்படுகிறது. 2026-ஆம் ஆண்டு, ஜூன் 22-ஆம் தேதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது.
இதற்கான தொடக்க விழா மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திங்கள்கிழமை பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது. தமிழக முதல்வா் விஜய் பங்கேற்று, முதற்கட்டமாக 30 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்து, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைத் தொடக்கிவைக்கிறாா்.
இந்த நிலையில், நாளை நடைபெறவுள்ள நிகழ்ச்சியின் ஏற்பாட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, அரசு மருத்துவமனையில் தாய் - சேய் மருத்துவ வார்டுக்கு சென்று, குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், பச்சிளம் குழந்தைகள் உள்ள வார்டில் நோய்த் தொற்று ஏற்படுவதற்கான அபாயமும் உள்ளது.
குழந்தைகள் வார்டில் நோய்த் தொற்று ஏற்படும் சூழலைத் தவிர்ப்பதற்காக, தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சியை மருத்துவமனை வளாகத்திலிருந்து கூட்டரங்குக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சி கூட்டரங்கில் மேடை, அலங்கார விளக்குகள், பேனர் உள்ளிட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Summary
Change in the event at Madurai Rajaji Government Hospital attended by CM Vijay
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







