மதுரையில் முதல்வர் விஜய் நிகழ்ச்சி: 15-க்கும் மேற்பட்டோர் மயக்கம்!
மதுரையில் முதல்வர் விஜய் நிகழ்ச்சியில் 15-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி...
மதுரையில் முதல்வர் விஜய் நிகழ்ச்சியில் 15-க்கும் மேற்பட்டோர் மயக்கம்... - DIN
மதுரையில் முதல்வர் விஜய் நிகழ்ச்சியில் வெய்யிலில் நின்றதாலும் முதல்வர் வரும்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதாலும் 15- க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் இன்று தொடக்கிவைத்தார். இதனால் அரசு மருத்துவமனை முன்பு ஏராளமான, அக்கட்சியினை சேர்ந்த தொண்டர்கள் குவிந்திருந்தனர்.
இன்று மதுரையில் கடுமையான வெய்யில் காரணமாகவும் மூன்று மணி நேரமாக அவர்கள் வெய்யிலில் பேரிக்காடுக்கு உள்ளே அடைத்து வைக்கப்பட்டிருந்ததால் தண்ணீர் இன்றி தவித்தனர்.
இறுதியில் முதல்வர் விஜய் மருத்துவமனைக்கு உள்ளே சென்றதும் 15 -க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து மயங்கி விழத் தொடங்கினர். அவர்களை காவல்துறையினர் ஒவ்வொருவராக தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பெண்கள், சிறுவர்கள், வயதானவர்கள் என அனைவரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர், மேலும் முதல்வர் கான்வாய் வாகனங்கள் அனைத்தும் சாலையின் நடுவே, மருத்துவமனை முன்பாக நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. முதல்வர் சென்ற பிறகு அனைவரும் பேரிக்காடில் இருந்து ஏறி குதித்து தப்பித்து ஓடினர்.
Summary
Chief Minister Vijay event in Madurai: Over 15 people fainted
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



