
திமுகவுக்கு வாக்களித்தால் நெல் கொள்முதல் நிலையம்: பிரேமலதா பிரசாரம்
மதுராந்தகம் தொகுதியில் திமுக வெற்றி பெற்றால் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என பிரேமலதா பேசியது குறித்து...

பிரேமலதா விஜயகாந்த் - எக்ஸ்
மதுராந்தகம் தொகுதியில் திமுக வெற்றி பெற்றால் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (செப். 28) தெரிவித்தார்.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுராந்தகம் நெல்வாய் கூட்டுச்சாலை பகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
''மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்த மரகதம் குமரவேலுக்கு மக்கள் தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும்.
திமுக வேட்பாளர் இத்தொகுதியில் வெற்றி பெற்றால் நெல் கொள்முதல் நிலையம் கட்டப்படும். விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்படும். விவசாயிகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவோம். முதியோர்கள் அனைவருக்கும் பென்ஷன் வாங்கித் தரப்படும்.
முதல்வர் விஜய் சொன்ன அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் வரை ஒன்றிணைந்து போராடுவோம். தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகள் அனைத்தையும் மக்களுக்குப் பெற்றுத்தருவோம். மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்'' என பிரேமலதா கேட்டுக்கொண்டார்.
Summary
Paddy procurement center if DMK is voted to power: Premalatha campaigns
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







