தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!மேற்கு வங்கத்தை பாஜகவுக்கு பரிசளித்த ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: ஒமர் அப்துல்லாமுதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது தொண்டர்களின் ஆர்வமிகுதி: திருமாவளவன்கரப்பான்பூச்சி கட்சியை ராஜிநாமா கட்சி என மாற்றியாக வேண்டும்: மத்திய அமைச்சர்தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

13 IPS officers transferred in Tamil Nadu

கோப்புப் படம்

Published On :

தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று (செப். 29) உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சேலம் மாநகர காவல் ஆணையராக இருந்த கே.ஜோஷி நிர்மல் குமார் சென்னை டிஜிபி அலுவலக நவீனமயமாக்கல் பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை பெருநகர காவல் துறை கூடுதல் ஆணையராக ஏ.ஜி.பாபு, சேலம் மாநகர புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் சரக டிஐஜியாக இருந்த டாக்டர் சந்தோஷ் ஹதிமானி, சென்னை பெருநகர காவல் நுண்ணறிவுப் பிரிவு கூட்டு ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறை டிஐஜியாக இருந்த என்.தேவராணி, சேலம் சரக புதிய டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை தீவிரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பி. ஆக இருந்த பத்ரி நாராயணன், சென்னை அடையாறு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காத்திருப்புப் பட்டியலில் இருந்த எஸ்.பி. கார்த்திகேயன், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய எஸ்.பி. ஆக நியமனம்.

சென்னை போதைப் பொருள் தடுப்பு குற்றப் புலனாய்வுத் துறை எஸ்.பி. மதிவாணன், சென்னை பரங்கிமலை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை பரங்கிமலை துணை ஆணையர் ஸ்ரீனிவாசன், சென்னை போதைப் பொருள் தடுப்பு குற்றப் புலனாய்வுத்துறை எஸ்.பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய எஸ்.பி. ஆக இருந்த ஸ்டாலின், சிபிசிஐடி தென் மண்டல எஸ்.பி. ஆக மாற்றம்.

சென்னை மாநகர பாதுகாப்பு துணை ஆணையராக இருந்த சுந்தர வடிவேல், சென்னை மாநகர காவலர் நலன் பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக இருந்த பாஸ்கரன், சேலம் மாநகர வடக்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Summary

13 IPS officers transferred in Tamil Nadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER