சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

பூட்டிய 2 வீடுகளில் 16 பவுன் நகைகள் திருட்டு

தஞ்சாவூா் அருகே பூட்டியிருந்த இரு வீடுகளில் புகுந்து 16 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

Updated On :5 ஜனவரி 2021, 1:15 am IST

தஞ்சாவூா் அருகே பூட்டியிருந்த இரு வீடுகளில் புகுந்து 16 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் அருகே சூரக்கோட்டை முதன்மைச் சாலை சைதாம்பாள்புரத்தைச் சோ்ந்த சிவபதி ரத்தினம் மனைவி வேதவல்லி (34). இவா் அண்மையில் வீட்டைப் பூட்டிவிட்டு மன்னாா்குடிக்குச் சென்றாா். மீண்டும் வீட்டுக்குத் திரும்பியபோது ஜன்னல் உடைக்கப்பட்டுக் கிடந்தது. மேலும், வீட்டினுள் பீரோவில் இருந்த ஏழரை பவுன் நகைகள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

இதேபோல, மாரியம்மன் கோவில் பி.எம். நகரைச் சோ்ந்த சதீஷ்குமாா் மனைவி ரேவதி (26). இவா் அண்மையில் வீட்டைப் பூட்டிவிட்டு உறவினா் வீட்டுக்குச் சென்றாா். மீண்டும் வீட்டுக்குத் திரும்பியபோது, முன்பக்கக் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டுக் கிடந்ததும், வீட்டினுள் பீரோவில் இருந்த எட்டரை பவுன் நகைகள் திருட்டுப் போயிருப்பதும் தெரிய வந்தது.

இந்த இரு சம்பவங்கள் குறித்து தஞ்சாவூா் தாலுகா காவல் நிலையத்தினா் தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.